|

முத்தரையர் கல்வெட்டு

Mar 12, 2022

தொல்லியலில் (ஆவணத்தில்) முத்தரையர்:
__________________________________________________

வாணகோ அரையர்:
________________________

விழுப்புரம் மாவட்டம் மகளூர் சிவன் கோயிலில் கி.பி.1253ல் வாணகோவரையன் கொடுத்துள்ள தனது உடல் நலம் வேண்டி செய்துள்ளான்.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் சி
2. இராசேந்திர சோழ தேவற்கு இ (யாண்டு 7வ
3. து வன்னெஞ்ச பெருமாள்ளான வாண
4. கோவரையர் திருமுகப்படி சிங்களர
5. ாயரும், இராராப் பிரமராயரும் இரா
6. சேந்தி சோழப் பிரமராயரும் புரவரியாரு செ
7. ய்ய கடவபடி பரிதூற் கூற்றத்து கணங்
8. கூர் உடையார் திருத்தாதோன்றீசுர மு
9. டைய நாயனாற்கு பூசைக்கும், திருப்பணிக்கு
10. ம் உடலா ஏழாவது மாசி மாத முதல் இவ்வூர்
11. பரி ஏரி நன்செய் நிலத்திலே ஒரு வேலி
12. நிலம் இறையி (லி) தேவதானமாக நமக்கு
13. நன்றாக விட்டேன் இப்படி கணக்கில் நி
14. றுத்தி அடைத்து குடுப்பதே இவை வா
15. ணகோவரையந் எழுத்து இவை திரும
16. ந்திர ஓலை எழுவார் நம்பிக்கு நல்லாந் எ
17. ழுத்து.

பக்கம் 52ல். 19.7. கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள சொக்கலிங்கபுரத்தில்
விநாயகர் கோயில் முன் மண்டபத்தூணில், விகாரி வருடம் (கி.பி.19001) திருச்சுற்றிலுள்ள விநாயகர் கோயிலை சொக்கலிங்கபுரத்தில் இருந்த கட்ட சிலம்பாம்பலகாறன் பிச்சன் அம்பலம் அவன் மனைவி வீராயி ஆகியோர்
செய்ததை விளக்கும் கல்வெட்டு

1. விகாரி ஸ்ரீஅற்பி
2. சி. மீம் 9சொ
3. க்கலிங்க புற
4.த்திலிருக்கும் வலை
5.யரில் கட்ட சி(லி)மபா
6.ம்பலக்காறன் பிச்
7.சநம்பலம் அவன்
8.பெண் சாதி விரா
9.யி மேற்படி குடும்பம் பிள்ளை
10. யாரிடத்தில் நித்திய ___
11. ருவை.

கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் நத்தமேட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள
புற்பவன ஈசுவரர் கோயிலில், வீரராசேந்திரனின் 26வது ஆட்சியாண்டில்
அரைய நாட்டு துடுமலைச் சேர்ந்த காட்டு வேட்டுவன் முத்தன் சக்கையன், (தென்னிலை) யைச்சேர்ந்த உய்யவந்தான் கையிலாயன்
கொடுத்தனர். இம்மண்ணனது 6வது ஆட்சியாண்டில் வேட்டமங்கலத்து ஊராரும், அரையர்களும், தென்சேரியைச் சேர்ந்த பூலுவ வேட்டுவன் சிலம்பன், செஞ்சிறுப்பிள்ளையும், நடுச்சேரியைச் சேர்ந்த கரடிவேட்டுவன்
செய்யப்பிள்ளையும் நொந்தாவிளக்கு வைத்தனர்.

23.1. கோயில் முன் மண்டப மேற்புறச் சுவரில் தென்மேற்கு மூலையில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில்

1 ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
2. ண்டு 14வது கிழங்கனாட்டு வேட்
3. டமங்கலத்து நடுவிற் சேரிக் கறடி வேட்டு
4. வரிற்செய்ய பிள்ளை செய்யபிள்ளை யேந்
5. வேட்ட மங்கல்தினாயனார் புற்பவன முடை
6. யாற்குச் சந்தியா தீப விளக் கொந்றுக்கு னா
7.ந் இக்கோயிலுள் பிராமணற்கு குடுத்த பழ
8.ஞ் சலாகை அச்சு ஒன்றுக்கும் சந்திராதி
9.த்தவரை குடங்கொடு கோயிற் புகுவாந் எரிக்
10.க் கடவாந் இது பந்மா ஷேஸ்வ ரட்சை

23.4. சிதைந்த நிலையில் தென்புறம் குமுத வரியில் உள்ளது. காலம் 13ஆம் நூற்றாண்டு.

1. ஸ்வஸ்தி ஸ்ரீவி ரார்) சேந்திர
2. தேவற்கு யாண்டு 26 (ஆவது) அரைய நாட்டுத் துடுமலில் இருக்கும் காட்டுவ
3. வேட்டுவந் முத்திஞ் சக்கையேந் புற்பவன முடையார் கோயிலுக்கு சந்தியா தீப விளக்கு ஒ
4. ன்றுக்குப் பழஞ் சலாகை அச்சு ஒன்றுங் கொண்டு ஊற் பிராமணந் குடங்கொடு கோயில்
5. புக்கான் இடக்கடவதாக இது மாயேசுர இரக்ஷை,

23.6. கோயில் முன் மண்டபத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டு வேட்டமங்கலம் ஊரவரும், அரையர்களும் நான்கு எல்லைகாட்டி நிலம்
கொடுத்துள்ளனர்.

23.7. பக்கம் 67ல் கோயில் முன் மண்டபத்தில் மேல்புறச் சுவரின் வடமேற்கு மூலையில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
2. ண்டு 14ஆவது கிழங்க நாட்டு, வேட்டமங்கலத்
3. து தென் சேரிப் பூலுவ வேடுவரிற் சிலம்பந், செஞ்
4. சிறுப் பிள்ளையேந் வேட்டமங்கலத்தினாயநார் புற்
5. பவந முடையமாற்குச் சந்திய தீப விளக்கொந்றுக்
6. கு நான் இக் கோயிலுற் பிராமணற்கு குடுத்தப
7. பழஞ் சலாகை அச்சு ஒன்றுக்கு சந்திராதித்தவ
8. ரை குடங்கொடு கோயில் புகுவான் எரிக்க கட
9. வாந் இது பந்மா ஹேச்சர ஷை.

இவ்வூர் வேடர்கள் நிறைந்திருந்ததால் வேட்டமங்கலம் எனப் பெயர் ஏற்பட்டது. வேடர்களும், வேட்டுவ (கவுண்டர்களும்) பூர்வீகத்தில் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களே ஆவர். மேலும் இக்கோவிலுக்கு
கொடையளித்துள்ளனர்.

12/2001 பக்.25 ஒழிந்தியாம்பட்டு, திரு அரசிலி ஆளுடையார் கோவிலில், கருவறை வடக்கு சுவரில், விக்கிரமச் சோழனின் (கி.பி.1127)ம்
ஆண்டு அரை விளக்கு வைக்க 45 ஆடுகளை
வாணராய முத்தரையன் கொடுத்துள்ளான். இவ்வூர் பாண்டிச்சேரி, திண்டிவனம் நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் ஊருக்கு வடக்கே 6 கி.மீட்டரில் உள்ளது.

1.ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது புணரப் புவிமாது
2.வளர நாமாது விளங்க ஜயமாது விரும்
3.பந் தன்னிரு பதுமலரடி மன்னர் சூட மன்னி
4.யஉரிமையில் மணிமுடி சூடிச் செங்கோல்
5.சென்று திசை தொறும் வளர்ப்ப வெங்கலி நீக்கி
6. மெய்யறந் தழைப்ப கலிங்க மிரியக் கடகரி
7.நடாத்தி வலங்காளாழி வரை யாழி நடாத்தி
8. எரிசுடரளவும் ஏழு குடை நிழற் கீழ் வீரஸிம்ஹா
9. ஸனத்து முக்கோக்குழா நடிகளோடு
10. வீற்றிருந்தருளிய கோபரகேசரி பந்மரான திருபுவனச்
11.சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
12.ண்டு 9வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒ
13.ய்மானடான விஜய ராஜேந்திர சோழவளநாட்டு பெருவெம்
14. பூர்நாட்டு திருவரசிலி ஆளுடையார்க்கு இன்னாட்டு
15.குயில் குலகாலபுரத்திருக்கு வலையன் கடியாறனுக்காக வாண
16.ராய முத்தரையன் வைத்த திரிநந்தா விளக்கு அரை அரையாலாடு நாற்ப
17. திதைஞ்ச சாவா மூவாப் பேரகடாக இது பந்மாஹேஸ்வர ரக்ஷை

குறிப்பு : இக்கல்வெட்டில் வலையனுக்காக, வாணராய முத்தரையன் நந்தாவிளக்கு (ஒரே இனம்) என்பதற்காக வைத்துள்ளது தெரிகிறது.



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us