|

முத்தரையர் குல வலையர் திருவிழா

Apr 14, 2022

?வலையர் பெருவிழா...
?பத்து நாட்கள் நடக்கும் வலையமார் வீட்டு திருவிழா...

?சித்ரா_பௌர்ணமி திருக்கல்யாண பெருவிழா
வலைவீசும் திருவிளையாடல்

சிவபெருமான் வலையராக (மீனவராக) மாறி வலையர் வீட்டு பெண்ணை திருமணம் செய்யும் வரலாற்று நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் வலையர் திருவிழா...

மாரியூரில் சிவபெருமானில் லீலை நடந்த இடம். மாரியூர்,கீழமுந்தல் ,வலையர் பெரும்பான்மையாக வாழும் இடம் வரும் சனிக்கிழமை 16 ம் தேதி திருவிழா சிவன் பார்வதிக்கு நடக்கும் திருவிழா இது முழுக்க முழுக்க வலையமார் மட்டுமே கடலில் வலையை வீசி மீன் உருவம் கொண்ட மீனை அடக்கும் வலையர்கள் விழா...

 மண்டகப்படி வாங்குபவர் நா.கணேசன் முத்தரையர் கீழமுந்தல்...
 
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக கண்ணப்ப நாயனார் சிலைவைத்து வழிப்பட இடம்தான் இந்த கீழமுந்தல்...

இது சாயல்குடி அருகே  முதுகுளத்தூர் தொகுதி கடலாடி ஒன்றியத்தில் உள்ளது...

திருவிழா நடக்கும் அனைத்து நாட்களிலுமே முத்தரையர் (வலையமார்) சமுதாயத்தினருக்கு மரியாதை...

உத்திரகோசமங்கை சிவன் கோயில் தமிழகத்தில் சிவன் தோன்றிய முதல் இடம்...

கீழமுந்தல்,மாரியூரில் உள்ள வலையர் சமுதாயத்தினர் சேர்ந்து மீன் உருவம் கொண்ட பொம்மை செய்வதற்கு அனைவரின் பங்கு தொகையில் செய்து வலைவீசி மீன்படலம் நடத்தும் திருவிழா நடத்துகின்றனர்...

அடுத்த கட்டமாக வலைமார் வீட்டு பெண்ணான பவழநிறவள்ளியை சிவனுக்கு திருமணம் செய்துகொடுப்பதற்காக   மூன்று கிராமங்கள் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைப்பதாக திருவிழா நிறைவு செய்கின்றனர்... (மூன்று கிராமங்கள் முத்தரையர் சமூகத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்)

திருவிழா  இராமநாதபுரம் சமஸ்தானம் மூலமாக நடக்கின்றனர் ...

அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்வார்கள் ஆனால் முழுக்க முழுக்க வலையமார் கொண்டாடுவது... வலைமார்களுக்கு மட்டுமே முன்னுரிமை காரணம் சிவனுக்கு பெண் கொடுத்து வலைமார் என்பதால்...

பவளநிறவல்லி(வலையமார்வீட்டு பெண்) பூவேந்தியநாதர் சிவன் வலையராக தோன்றி வலையமார்வீட்டு பெண்ணை திருமணம் செய்யும் போது சிவனின் பெயர்) திருமணம் செய்து கொடுப்பதே இந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் வலையமார் திருவிழாவாகும்...

இது மூன்று தலைமுறைகளுக்கு முன் சிவன் தோன்றிய உத்திரகோசமங்கை ஆலயத்தில் நடந்து வந்தது ஆனால் இப்போது இது கடற்கரை ஓரத்தில்  நடக்கிறது...


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us