பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கApr 15, 2022
நேற்று (14/04/2022)வியாழன் அன்று தமிழ் வருட பிறப்பு மற்றும் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்கள் திருகாட்டு பள்ளி,நியமத்தில் நமது தலை நகரை உருவாக்கி,நமது இன குல தெய்வமான அருள்மிகு மாகாலத்து காளா பிடாரி அம்மனுக்கு கோவில் கட்டி ,வழிபட்ட அந்த புண்ணிய பூமியான நியமத்தில் நேற்று காளா பிடாரி அம்மனுக்கும்,சிவ பெருமானுக்கும்,காவல் தெய்வம் முனீஸ்வரருக்கும்,பேரசரர் பெரும் பிடுகு முத்தரையருக்கும் 9 வகையான அபிஷேகம் செய்து,புத்தாடை அணிவித்து ,மலர் மாலை அணிவித்து,பொங்கல்,பொறி, அவல் பொட்டுக்கடலை படைத்து,மஞ்சள் ,குங்குமம்,காதோல கருகமணி,வளையல், பாசி, ஆகிய அலங்கார பொருட்களால் அலங்கரித்து சிறப்பு அபிஷேகமும்,ஆராதனையும்,நடை பெற்றது.இதில் அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை பொருளாளர் c. லெனின் ராஜ்,மற்றும் பட்டு கோட்டை ராஜேஷ்,முசிறி போஸ்ட் மேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.