ஆளப்பிறந்த முத்தரையர்களே
May 24, 2022
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (23/05/2022) திங்கள்கிழமை, புரட்சி சிங்கங்கள் சார்பில் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள Grand Palace-ல் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கழக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
இந்நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர் திரு.ரவிச்சந்திரன், புரட்சி சிங்கங்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு.சிரஞ்சீவி, தமிழ்நாடு முத்தரையர் வாழ்வாதார சங்க தலைவர் திருமிகு.தனலெட்சுமி, வழக்கறிஞர் தங்க.கோபிநாத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்