|

ஆன்மீகம்

Jun 24, 2022

பூங்கமல வதனமும், பொழிகருணை நயனமும், புன்முறுவல் நிலவெறிப்பும், 

பொலிசடாடவியும், அதில் உறை நிலா மதியும், புனை குழை இலங்கு காதும், 

தேங்கு பரமானந்த சின்மயானந்த காயமாம்
சித்தி அருள் முத்திரையும், மேல்

சிவனானுபவம் நீங்கினோர் சேர அருள் செபமாலை, சிவஞான புத்தகமும், ஓர் 

வேங்கை அதன் உடையும், சரற்கால மதிகோடி
வெள்ளமென நிறை வடிவமும்,

"மேலான தெய்வம் நாம் அன்றி வேறு இல்லை இதுமெய்!” என்று எடுத்த கனலும் 

ஓங்க வடவாலடியில் உறைகின்ற தெய்வமே!
உன்னையன்றி வேறு நினையேன்

ஒன்றாகி ஆனந்த உருவாகி என் உயிர்க்கு
உயிரான பரம சிவமே.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருவடிகளே துணை..


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us