அன்னை காளா பிடாரி போற்றி
Jun 25, 2022
நியமம் அன்னை காளா பிடாரி கோட்டை காவல் தெய்வம் கருப்பண்ணசாமி போற்றி ! போற்றி !!!
🔥🔥🔥🔥🔥🔥
திருப்பாசேத்தியில் செய்து
தீட்டி வச்ச வீச்சரிவா.
🔥
துடியாயான தெய்வம் எடுத்து விளையாடும் வீச்சருவா.
🔥
துணையாக துணை நிற்கும் வீச்சருவா
🔥
துயரம் போக்கும் வீச்ருவா.
🔥
துன்பம் போக்கும் வீச்சருவா.
🔥
சோகங்களை போக்கி சந்தோஷத்தை கொடுக்க வரும் வீச்சருவா.
🔥
வீராதி வீரன் சுழற்றி வரும் வீச்சருவா.
🔥
ஏழைகளின் தெய்வத்துகாரனின் வீச்சருவா.
🔥
எதிரிகளை பதம் பார்க்க கூப்பிடும் வீச்சருவா.
🔥
பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் வீச்சருவா.
🔥
கடல் தாண்டி சென்றாலும் கண்ணின் இமை போல் காத்தருளும் வீச்சருவா.
🔥
கோணகொண்டைகாரன் கோடி வரங்களை கொடுக்கும் வீச்சருவா.
🔥
முன் கோபக்காரன் முன் நின்று காத்து நிற்கும் பாசக்காரனின் வீச்சருவா.
🔥
இருபத்தோரு உடன்பிறப்புகள் கொண்டவரின் வீச்சருவா.
🔥
பில்லி சூனியங்கள் ஏவல் மந்திரம் தந்திரங்களை துவம்சம் செய்யும் வீச்சருவா.
🔥
மிரட்டும் பார்வையும் முறுக்கு மீசையும் கொண்ட பாசகாரனின் வீச்சருவா.
🔥
நட்டநடு சாமத்திலே நாய் குழைக்கும் நேரத்திலே வேல்கம்பையும் வீச்சருவாளையும் ஓங்கி கொண்டு வருபவரின் வீச்சருவா.
🔥
கிட்டத்துல யாரும் எவரும் நெருங்க முடியாது உண்மையான பாசம் வைத்தால் மட்டுமே நெருங்க வைக்கும் வீச்சருவா !!!
🔥நியமம் கோட்டை மீட்டுருவாக்கம் சேவைக்கு காவலுக்கு வாருமய்யா !!!
🔥
காவல்கார வம்சம் - கருப்பண்ணசாமி திருப்பாதம் போற்றி !!!
💥💥💥👑🔥🔥🔥