ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 26, 2022
கோனாட்டான் வீரசோழன் :
“தென்குடும்பரான கோனாட்டான் வீரசோழன் ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி..”
தென்குடும்பரான கோனாட்டான் வீரசோழன் ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் அருக தேவருக்கு அளித்த நிலக்கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது”
இக்கல்வெட்டில் கூறும் கோனாட்டான் வீரசோழன் என்பவர் யார் என்பதை இக்கட்டுரையில் காண்போம் வீரசோழன் என்ற பட்டம் கொண்டவர்களில் இருங்கோவேள் மன்னர்கள் தங்களை கோனாட்டான் என அழைத்துகொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொங்குச் சோழர்கள் கோனாட்டு இருங்கோளர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என புவனா சீவானந்தம் கூறுவார்
(புவனா சீவானந்தம் -கொங்குச் சோழர்கள்)
கோனாட்டான் என்பது ஒரு சாதி பெயரோ அல்லது குடிப்பெயரோ கிடையாது. அதுஒரு இருப்பிடத்தின் அடையாளம். கோனாடு என்பது சங்ககாலத்திலேயே இருந்துள்ளது. புறநாநூற்றில் கோனாட்டு எறிச்சிலுார் மாடலன் மதுரைக் குமரன் என்னும் புலவர் குறிக்கப்படுகிறார். இக் கோனாடு என்பது புறநாநூற்றில் பாடப்பெற்ற இருங்கோவேளின் பெயரால் இருங்கோனாடு என்று வழங்கியதன் சுருங்கிய வடிவமே என்பார் திரு. சுப்பாராயலு.
சோழ வேந்தர்களில் முதலாம் ஆதித்தனுடைய மகன் முதற் பராந்தகன் கி.பி. 907-இல் ஆட்சிக்கு வந்தான். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப் பெயர் உண்டு. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய போது கோனாட்டு அரசர்களான இருக்குவேளிர்களில் ஒரு பிரிவினரை சுய ஆட்சி பெற்ற கொங்குச் சிற்றரசர்களாக நியமித்தான்.
(கே.வி. சுப்பிரமணிய அய்யர் (Historical sketches of Ancient Dekhan) தொகுதி II, பக். 67)
ஒய். சுப்பராயலு தமது முனைவர் பட்ட ஆய்வேட்டில் (The State in Medieval South India 6001350. 1976 Madurai University) . இருங்கோவேளாளர்களின் கால்வழி பற்றி குறிப்பிட்டுள்ளார். (Appendix - 2, Table - 2 ) அதில் எட்டாவது மன்னனான வீரசோழ இளங்கோவேள் என்ற பட்டம் கொண்டவர், பிராந்தகன் குஞ்சர மல்லன் என்றும் கூறப்படுகிறார்.
சோழ மன்னர் இராஜகேசரிவர்மன் 2 - ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு வீரசோழ இளங்கோவேளாயின ஒற்றி மதுராந்தகன் என்றும் 3 -ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு வீரசோழ இளங்கோவேளாயின பராந்தகன் குஞ்சரமல்லர் என்றும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
x----------x---------x---------x
1. ஸ்வஸ்திஸ்ரீ கொவிராசகெசரிபன்மற்கு யா
2. ண்டு 3 -ஆவது உறத்தூர்க் கூற்றத்து புதுக்குடி
3. அவந்தியகொவப் பல்வவரையனாயி(ந) மயிலை தி
4. ண்டன் உறையூர்க் கூற்றத்து அல்லூர் அல்லூர்நக்கன்கொயி
5.ல் வரகெஸ்வரக்கு தெவதானமாக பண்டு விளைந்தறியாக் களர் அ(பொ)வநமெ.
6. ய் கிடந்த நிலத்தை விரசொழ இளங்கொவெளாயிந பராந்தகன் குஞ்ச
7. ர மல்லாக்கு விண்ணப்பஞ்செய்து திருமுகங்கொண்டு அல்
------------------------------
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 8, எண் 694, மற்றும் A.R.No. 380 of 1903)
குளத்தூர் தாலுகா, குடுமியாமலை, சிகாநாதசுவாமி கோவிலில் மடப்பள்ளியின் கீழ்புறம் சுவரிலுள்ள கல்வெட்டு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கோவேளான் என்பவர் கீழ்மணநல்லூரில் உள்ள தன் வேளாண் நிலத்தை கொடையாக கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்:
x----------x---------x---------x
1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் சொழ நாடுகொண்ட சுந்தர (பாண்)டிய் தெவற்கு யாண்டு ௪ வது
2.இத்திருக்கொயிலில் இரண்டாம் பிராகாரத்து திருவா ...ல் இடஞ்சலாயிருக்கையாலெ ஆற்றூருடையா
3.ன் பொன்னகாங்கையராயர் இது வாங்கி திருமாளிகையும் திருவாயிலும் பெருக்கச்செய்ய இதில் கல்வெட்டு
4.படியெடுத்து படி எடுத்தபடியெ வெட்டுகவென்று உடையார் காங்கையராயர் அருளிச்செய்ய வெட்டினபடியாவது கொ
5.ப்பிரகெசரிபன்மற்கு யாண்டு ௩௰௩ வது திருநலக்குன்றத்து வரமெசு ரற்கு பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ
6.வெளானென் ஈழமெறியப்பெரகின்றெந் கீழ்மணநல்லூரில் குடுத்த நிலம் வெலிச்செய்யும் திருவின்தினைசெபமனா
7.யொகியர்க்கும் திருவமுதுக்குமாக இன்நிலஞ்செய்துகுடுத்தென் பிராந்தகன் குஞ்சிர மல்லனான வீரசொழ இளங்கொ(வெளா)
8. னென் இது பன்மாஹெஸ்வர ரஷை.
(புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண். 255)
புதுக்கோட்டை மாவட்டம் கோனாட்டுக் கொடும்பாளூரில் சிற்றரசர்களாக ஆட்சி செய்து வந்த இருங்கோவேளிர் வம்சத்தினர் சோழ அரசர்களுடன் மண உரவு கொண்டவர்கள். இச்செய்தியை கே.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தன் நூலிலும் கூறியுள்ளார். அதனால் இவ்வம்சத்தினர் சோழர்கள் போன்று ஆண்கள் குஞ்சர மல்லன் என்றும் பெண்டிர் குஞ்சர மல்லி என்றும் அழைத்துக்கொண்டர் என்பது கல்வெட்டுகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜராஜனுடைய தந்தையாகிய சுந்தரசோழன் (வீரசோழன்) காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய அரசியல் தலைவர்களுக்கு சுந்தர சோழனால், வீரசோழன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு வீரசோழன் குஞ்சர மல்லன் எனப் பெயர் பெற்று விளங்கியவர்கள் பலர் ஆவார். அதேபோல் இராசகேசரி வர்மன் 14 -ஆம் ஆண்டு கல்வெட்டு சிறியவேளானாகிய பராந்தக இருங்கோளன் மகள் குஞ்சர மல்லி என குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
x----------x---------x---------x
1.ஸ்வஸ்திஸ்ரீ கொ இராசகெசரிபன்மற்கியாண்டு ௰௪ ஆவது (வ)டகரை தெவதான …யம் அமநிநாராயணச் சதுவெதிமங்கலத்து தி(ரு)(க்*)குடித்(திட்)டை பெருமாளுக்கு சிறியவெளான் தெவி(ய்) இராசாதிச்சி ஒரு நொந்தா விளக்கு சக்தி.
2.ராதிச்சவற் எரிய வைய்த்த ஈழ(க்*) காசு உ௰௫ இருப(த்)தஞ்சு சிறியவெளான் மகள் குஞ்சிரமல்லி(ய்) ஒரு நொந்தாவிளக்கு (ச)ந்திராதிச்சவற் எரிய வையத்த ஈழக்காசு உ௰௫ ஆக (௫)௰ கா
3.(சு)ம் குடுத்து கொண்ட பூமி யமங்குடி(ய்) ஊரின் மெல்பக்கத்து ஆலிக்கொன்றை சிரிதர…………..
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 3, எண் 122 மற்றும் A.R. No. 299 of 1908 )
இதேபோல் கி.பி.962 ஆம் ஆண்டு சுந்தர சோழனின் கல்வெட்டில் இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன் என்று குறிப்பிடப்படுகிறார்கள்
கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு ஒன்று இருங்கோளன் நாரயணன் பிரித்திவிபதியார் என்பவரை பற்றி குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது மகள் வானவன் மாதேவியார் ஆவார். இவள் உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாகும். இவ்வேளிர் மன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சி காலமான கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டில் இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன் என்று குறிப்பிடப்படுகிறது.
கி.பி.1014 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டில் இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன் என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லனின் புதல்வன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புறநானூறில் 76, 77, 78, மற்றும் 79 பாடல்கள் இடைக்குன்றூர் கிழார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி பாடியவையாகும். அதில் பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவனிடம் தோல்விபெற்ற ஏழு மன்னர்களைப்பற்றி குறிப்பிடுகிறார். பாண்டியனை மள்ளர் என்றும், அவனிடம் வம்பு செய்து போருக்கு வந்த எழுவரை வம்ப மள்ளர் என்று இடைக்குன்றூர் கிழார் தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த வம்ப மள்ளர் எழுவர் சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், பொலம்பூண் எழினி, எருமையூரன், இருங்கோவள், இயல்தேர்ப் பொருநன் என்று அகநானுறு பாடல் 36 குறிப்பிடுகிறது.
“உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழக்”
(புறம். 77 - 9 -11)
“பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர”
(புறம். 78 - 6 -8)
“வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.”
(புறம். 79 - 4 -6)
“சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்”
(அகம். 36 – 15 - 20)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் இலக்கிய சான்றுகளிலிருந்து இருங்கோவேள் வம்சத்தவர்கள் மள்ளர்(மல்லர்) குலத்தவர் என்பது உறுதியாகிறது.
இந்த மள்ளர்(மல்லர்) குலத்தவர்கள் தங்களை பன்னாடி, மண்ணாடி பலகான், மூப்பன், குடும்பன், குடுமி, காலாடி, வயக்காரர், வேந்தன், தேவேந்திரன் பல்லவராயன், உடையார், தேவர் போன்று பல பெயர்களில் அழைத்துக்கொள்வதை அவர்களுடைய செப்பேடு மற்றும் கல்வெட்டு உறுதி செய்யும். அதன் அடிப்படையில் மள்ளர்(மல்லர்) குலத்தைச் சார்ந்த இருங்கோவேள் மன்னர்கள் தங்களை குடும(ம்ப)ர் என அழைத்துக்கொண்டதை கீழ்கண்ட கல்வெட்டுக்கள் சான்று பகர்கிறது.
கீரனூரில் உள்ள திருவாகிசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஒன்று இந்தக் குடும்பர் திருவாகீசுவரர் கோயிலில் நாட்டியப் பயிற்சி நடைபெறுவதற்காக இருகலம் நெல் விதைப்பாடு உள்ள நஞ்சை நிலத்தை நட்டுவப் புறமாக விட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு வாசகம்:
x----------x---------x---------x
1.ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜெந்திர தெவற்க்கு யாண்டு பத்தாவது பொங்கலூற்கா நாட்டு
2.கிரநூர் குடுமரில் சுந்தன் அதி(ச)ய சொழநாந குலோத்துங்க சொழ இருங்கொ
3.ளநென் இந்நாயநா(ர்) திருவாகீஸ்வரமுடையாற்கு நட்டுவப் புற(த்து)க்கு வி
4.ட்ட நிர் நிலமாவதுக்கு நான்கெல்லையாவது எந்நிலத்து…
5.குளத்தில் மெத்தலை எரிக்கு மெற்கும் கிழ்மேல் ப
6.(ழு)ர் வாக்காலுக்கு தெற்கும் ஆக
7.நெல்விதை இருகலமும் நட்டுவப்புற
8.(ம்)மாக இட்டுக் கொடுத்தேன் சுந்தன் அதி(ச)ய சொழநாந குலோத்துங்க சொழ இருங்
9.கொளநெந் ஸந்திராதித்தவற் இந்நிலம் இடநைமாராய
10.த்துக்கு பன்மாஹெசுர ரச்சை
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 5, எண் 278, மற்றும் A.R.No. 602 of 1893)
கி.பி. 1159 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொங்கூர் பசுபதீசுவரர் கோயில் மகாமண்டபம் நுழைவாயில் இடது நிலைக்கால் உள்ள முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று முதலிகளில் சுந்தன் அதிய சோழனான வீரசோழ இருங்கோளன் அமுதுபடிக்காக அரிசி கொடை அளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம் :
x----------x---------x---------x
1. ஸ்வஸ்திஸ்ரீ கு
2. லோத்துங்க சோ
3. ழ தேவர்க்கு
4. யாண்டு பத்(து)
5. ஆவது பொங்
6. கலூர்கா நாட்டு கொ
7. ங்கூராந செ(யங்)
8. கொண்டசோழந
9. ல்லூர் ஆளுடை(யா)
10. ர் பசுபதிச்சுவர
11. முடையாற்கு அமு
12. துபடி அரிசி க அ
13. ஞ்சு . . .ாண்டு ஆ
14. க நெல் விடுவ
15. தாகவும் அரிசி
16. வரி அறகாத்
17. தி அளப்பார்கள்
18. ளாக கல்வெட்
19. டி குடுத்தோம்
20. முதலிகளி
21. ல் சுத்தன் அதி
22. ய சோழநா
23. ந வீரசோழ
24. இருங்கோளந்
25. . . . . ஆளவந்
26. தாந் யாழ்வ
27. ல்லாநேன்னான குலோ
28. துங்க சோழ . .
29. ப
30. . . . . . . . .
(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் - 73/2010)
தாராபுரம் வட்டம், குண்டடத்தில் உள்ள அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டு குண்டோடத்து குடும்மரில் இருங்கோளன் என்பவன் குறிக்கப் பெறுகின்றார்.
கல்வெட்டு வாசகம்:
x----------x---------x---------x
1. ஸ்வஸ்திஸ்ரீ கு
2. லோத்து
3. ங்க சோழ
4. தேவர்க்கு
5. இயாண்
6. டு பத்தா
7. வது குண்
8. டோடத்தி
9. ல் குடும்மரில்
10. இருங்கோள
11. ன் …… காவன்
12. நா ……..யா………கொ
13. ங்க ………………..
14. வார் மற்றுந்
15. ருவந் இத்தி
16. ருவாசல் திரு
17. மண்டபத்
18. துக்கு சந்தி
19. யாதீபம் உன்றும்
20. விடாமல் சந்திராதித்தவரை
21. செலுத்தக்கட
22. வோமாகவும்
23. இது பந்(மாயே)சுர
24. ரர் இரச்சை.
(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 119 /2010, மற்றும் ARE 130 / 1920 )
என்று குறிப்பிடுகிறது.
மேலே கண்ட கல்வெட்டுகள் இருங்கோவேள் மரபினர் மள்ளர் குலத்தில் குடும்பர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நிறுபிக்கிறது. மேலும் அவர்கள் கொங்கு சோழர்களின் கீழ் குறுநிலத் தலைவர்களாக இருந்ததால் வீரசோழன் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் தென்பகுதியில் உள்ள கோனாட்டிலிருந்து கொங்குப் பகுதியில் வந்து ஆட்சி செய்ததால் தங்களை தென் குடும்பர்கள் என்றும் கோனாட்டான் என்றும் கூறிக்கொண்டனர்.
இதன் அடிப்படையிலேயே மரியாதைக்குரிய Dr. குருசாமி சித்தர் B.E., M.Sc., (Engg.) Ph.D {UCorn-USA) அவர்கள் அவ்வாறு கூறினார். இக்கருத்தை தொல்லியல் அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திரு புலவர். இராசு அவர்களும் இதை ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளார்.
இப்பதிவு வரலாற்று ஆய்வாளர்
திரு. பாண்டியன் மல்லர் ( Facebook : pandyan Mallar) அவருடைய பதிவில் இருந்து எடுக்கபட்டது.
#மீண்டெழும்_சோழர்கள்
#சோழன் #வேந்தன் #மல்லன் #மள்ளன் #மூப்பர் #மல்லர்_ஆண்டவர் #செம்பியன் #பணிக்கர் #சோழியர் #அரையன் #பேரையன் #பேரரையன்
#இந்திரன் #தேவேந்திர_சக்கரவர்த்தி #குஞ்சர_மல்லர் #ஆய்_மள்ளர் #பலகான் #காலாடி #வாதிரியன் #கோழியர் #தேவர் #தேவன் #இளந்தரியன் #தொண்டைமான் #வளவன் #கிழவன் #மகிழ்நன் #ஊரான்
#மருதம் #சோழநாடு