முத்தரையர் வரலாற்றில் திருவானைக்காவல்
07 Jan, 2025
தொடர்ந்து படிக்கJun 27, 2022
வில்லியார் என்ற வீரத்திருமகள் !!!!வணங்குவோம் வாரீர் !
🔥🔥🔥🔥🔥🔥🔥
திருச்சி மதுரை சாலையிலுள்ள புழுதிப்பட்டியில், கையில் வில்லை ஏந்தியவாறும் தலையில் கொண்டையுடனும் நடுகல் சிற்பம் உள்ளது.
🔥
இவரை 'வில்லியார்' என்று அழைக்கின்றனர்.
மேடையின்மீது அமைக்கப்பட்டிருக்கும் வில்லியார் சிற்பத்தின் அருகே வழிபாட்டுக்காக நடப்பட்டிருக்கும் பெரிய அரிவாள்களும் ஈட்டிகளும் வில்லியார் தொடர்ந்து வழிபாட்டிலிருப்பதை உணர்த்துகின்றன. கையில் வில்லை வைத்திருப்பதனால் இப்பெயர் வந்திருக்கலாம்.
🔥
நின்றநிலையில் வலதுகையில் நீண்ட வில்லை வைத்துள்ள நிலையில் காணப்படும் வில்லியாரின் கதையை அவ்வூகாரர்களிடம் கேட்டபோது, முன்பு இப்பகுதியில் ஒரு கோட்டை இருந்ததாம். இக்கோட்டையில் வசித்துவந்த ஏழு பெண்களுக்கு இந்த வில்லியார் பாதுகாப்பாக இருந்து வந்துள்ளராம்.
🔥
ஒரு நாள் வில்லியார் இல்லாத நேரம் பார்த்து கொள்ளைக் கும்பல் ஒன்று இக்கோட்டையிலிருந்த ஏழு பெண்களையும் கடத்திக் கொண்டு போய் விட்டது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட வில்லியார் அவர்களை தனியாக விரட்டிச் சென்று கொள்ளையர்கள் அனைவரையும் வீழ்த்திவிட்டு ஏழுவரையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். திரும்பும் வழியில் இருட்டியதால் இங்கு தங்கியுள்ளனர். அப்போது காயம்பட்டதுபோல் கீழே விழுந்துகிடந்த ஒருவன் வஞ்சகமாக வில்லியாரின் மேல் வாளைப் பாய்ச்ச, வீழ்ந்தார் வில்லியார். மணமுடைந்த ஏழு பெண்களும் அருகிலிருந்த கிணற்றில் விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
🔥
தனது உயிரைக் கொடுத்து அவ்வூர் பெண்களை கொள்ளையரிடமிருந்து மீட்ட வில்லியாரின் நினைவாக அவ்வூர்காரர்களால் எடுக்கப்பட்டதாம் இந்த 'வீரக்கல்'.
🔥 இவ்வூருக்கருகிலுள்ள 'கொன்னையூரில்' காப்புக்கட்டிய எட்டாவது நாள் இங்கு திருவிழா நடக்கிறது. திருவிழாவின்போது சாமியாடி இக்கிணற்றில் குதித்து பக்கவாட்டிலுள்ள படிக்கட்டுகளின் வழியே மேலேறுகிறார். இக்கிணற்றில்தான் அந்த ஏழு பெண்கள் குதித்தனராம். சாமியாடி கிணற்றில் இறங்கிய திசையையும் மேலே ஏறும் திசையையும் கணக்கில்கொண்டு அவ்வூரில் மழையும் விளைச்சலும் எவ்வாறு இருக்கும் எனவும் கணக்கிடுகிறார்கள்.
🔥
நான்கரைஅடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட இச்சிற்பம் பின்பக்கம் குடுமியுடனும் மீசையுடன் கூடிய ஆண் உருவத்துடன் காணப்படுகிறது. இடக்கையில் வில்லை ஏந்தியும் வலக் கையில் நாணில் பூட்டிய அம்பைச் செலுத்துவது போலவும் வடிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆரமும், இடையில் அரைகச்சை ஆடையுடனும் கூடிய வயிற்றுக்கட்டும் காணப்படுகிறது. கச்சையில் உறையுடன் தொங்கிய வாளைக் கொண்ட இந்த ஆண்உருவம் இடதுகாலை முன்வைத்து வலதுகாலைப் பின்வைத்து இடப்புறம் திரும்பிய நிலையில் போரிடுவதுபோலவும் தோற்றமளிக்கிறது.
🔥
இச்சிற்பம் குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த அறிஞர்க திரு வீரராகவன் ஐயா கூறியபோது இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், ஏழு பெண்களின் கதை பொதுவாக நிறையப் பகுதிகளில் வழங்கப்படுவதுதான் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
🔥
நமது வரலாற்றைப் படிக்கும்போது அரசர்களின் வரலாற்றை அவர்கள் செய்த போர்கள் கொடுத்த கொடைகள் போன்றவற்றைப் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். ஓவ்வொரு ஊரிலும் வாழ்ந்த எளிய மக்களைப்பற்றியோ அவர்கள் அவர்களைச் சார்ந்த மக்களுக்காக செய்த தியாகங்களையோ நாம் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் இத்தகைய வீரக்கல்கள்(நடுகற்கள்), நவகண்டங்கள், சதிகற்கள் போன்றவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாற்றை ஓரளவேனும் பதிவு செய்யலாம். இத்தகைய மகத்தான பணியில் தற்போது பலர் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
🔥
இப்பதிவில் வரக்கூடிய கதையின்
வழித்தோன்றல் புளுதிபட்டி முத்தரையர் சமுதாயத்தால் பங்குனி உத்திரத்தன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழா
🔥
புழுதிபட்டி இரண்டு வகை ராவுக்கு மட்டுமே இந்த கோவில் சொந்தமானது
அம்பலக்காரர் வகையறா
பூசாரி வகையறா
🔥
இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தால் வில்லியார் என்றும் ஆண்டி என்றும் பெயர் சூட்டப்படுகிறது
🔥
முதலில் பெண் குழந்தை பிறந்தால் அரியநாச்சி என்றும் ௮ரியம்மாள் என்றும் பெயர் சூட்டப்படுகிறது
🙏🙏🙏🙏🙏முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் 🤝🤝🤝அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com🎤🎤🎤