ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jul 01, 2022
கள்வர்கள் திருடிச் சென்ற பசுக்களை மீட்டு வரும் போது உயிர் நீத்த #காரி_முத்தரையர் க்கு நினைவாக எழுப்பப்பட்ட நடுக்கல்
இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள். விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக #முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.