|

முத்தரையர் கல்வெட்டு

Jul 02, 2022

#செந்நெல்_வனம்  (சன்னவனம்)

இந்த கோவில் சொத்துக்களை முத்தரையர், வெள்ளாளர் தவிர்த்து வாங்கவோ உபயோகபடுத்தவோ முடியாது....

உஞ்சனை விசயாலயனின் கோட்டை இருந்த ஊர். அவனது கோட்டையாக விளங்கிய ஊர். தற்போது விசாலயன் கோட்டை என எழுதப்படுகிறது :சாரங்கோட்டை என உச்சரிக்கப்படுகிறது. இது குன்னங்கோட்டை நாட்டின் முக்கிய கிராமங்களில் ஒன்று.

கல்லுப்பட்டியில் இருந்து விசாலயன் கோட்டைக்கு செல்லும் வழியில் கூரையாற்றின் தென்கரையில் உள்ளது, சன்னவனம் என்று அழைக்கப்படுகின்ற எழுதப்படுகின்ற செந்நெல் வனம் என்ற அழகிய தமிழ்ப்பெயர் கொண்ட சின்னஞ்சிறிய ஊர்.
இவ்வூரும் கொன்னங்கோட்டை நாட்டுக்கு உரியதே!

🔥  இங்கு தான் உள்ளது செந்நெல் வனநாதர் கோயில்.
இந்த அழகிய தமிழ்ப் பெயரை வெளியே உள்ள இரும்புக் கதவில் சாலிவரீட்டீஸ்வரர் என்றும், சுவரில் வண்ணத்தில் சாலிவாகன ஈஸ்வரர் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

சிவகங்கை தேவத்தானத்திற்கு உரிய 84  கோயில்களில் இதுவும் ஒன்று.

தேர்த்திருவிழா நடந்த கோயில் இந்தக் கோயில் தேரைத்தான், விரிசிலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியபோது எழுபொன்கோட்டைக்கு ஆற்றுவழி இழுத்துக்கொண்டு போனார்கள்என்ற வழிவழிச் செய்தி ஒன்று இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்த நடராசர் உள்ளிட்ட சில ஐம்பொன் திருவுருக்கள் பாதுகாப்புக் கருதி கோயிலூரில் வைக்கப் பட்டுள்ளது..

 "சாமி கருவறையும் அர்த்தமண்டபமும் பாண்டியர் காலத்தவை. எட்டுக்கண் விட்டெரிய பேரும்புகழும் விரிந்த சிவனிவன். இந்தக் கோயில் சொத்துகளை  #முத்தரையர் , வெள்ளாளர்களை தவிர வேறுயாரும் பயன்படுத்தினாலோ விலைக்கு வாங்கினாலோ விளங்கமாட்டார்கள். அவ்வளவு சக்திவாய்ந்த தெய்வம்.

 பலநூறு குடும்பங்களுக்கு குலசாமியே இந்த சன்னவனநாதர் தான். இங்கு தான் குழந்தைகளுக்கு முதல்முடி எடுத்து காதுகுத்துகின்றனர். இந்தப் பகுதியில் பலருக்கு சன்னப்பன் எனப் பெயர் விளங்க இதுவே காரணம்.

சாதாரண நாட்களில் நடமாட்டமே இருக்காது.  வருடம் வருடம் சிவராத்திரிக்கு கண்கொள்ளாக் கூட்டம்

கோயிலை ஒட்டி வடக்கே வடக்குவாய்ச் செல்வி. செல்லிக்கு மருதமரம் நிழலளிக்கிறது.

செந்நெல் வனநாதரின் கருவறை அர்த்தமண்டப வடக்கு மேற்கு தெற்கு வெளிச் சுவர்களிர் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன..


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us