|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jul 03, 2022

குளித்தலை என்றாலே இனிய நினைவுகள் மனதை நெகிழச் செய்யும்...
2013 - 2014  ஆம் கல்வியாண்டில் கல்லூரி  முதல்வராகப் பொறுப்பேற்ற மரியாதைக்குரிய  முனைவர் மு.ம.செந்தமிழ்ச்செல்வி அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் பெரிதும் கவனம் செலுத்தியவர்கள். இவர் முதல்வராக இருந்த போது அதற்கு முந்தைய முதல்வர் முனைவர் ந.செல்வராசு ஐயா விட்டு வந்த 2B , 12 F  செயற்பாடுகளையும் , ஏழை எளிய மாணவர்கள் பயில வசதியாகப் புதிய பட்டப்படிப்புகளைப் பெறுவதிலும் முனைப்பு காட்டியவர். இருபத்தாறாண்டுகள் குடந்தை மகளிர் கல்லூரியிலும், சுமார் ஆறு ஆண்டுகள் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவராகவும், இரண்டாண்டுகள் அக்கல்லூரியின் தேர்வு நெறியாளராகவும் பின்பு குளித்தலைக் கல்லூரி முதல்வராகவும்,  பணி மேம்பாட்டில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வராகவும் , திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகவும் செம்மையாகப் பணியாற்றியவர். திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்த போது அப்போதைய கல்லூரிக் கல்வி செயலரிடம் போராடி குளித்தலைக் கல்லூரிக்கு இருபது வகுப்பறைகளைப் பெற்றுக் கொடுத்தவர். எந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் அவற்றை முழு ஈடுபாட்டுடன் செய்யக் கூடியவர். பதவியால் இவர் பெருமை பெற்றதைவிட இவரால் பல்வேறு பதவிகள் பெருமை பெற்றன என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். பல்கலைக்கழக மானியக் குழுவின் வேதியியல் துறை பாடத்திட்டக்குழு உறுப்பினர், தமிழ் நாடு முழுவதும் பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளும் தம்மைப் பெருமைபடுத்திக் கொள்ள காரணமானவர். உண்மை , உழைப்பு , நேர்மை இவரோடு உடன்பிறந்தவர்கள். தம் பணிக் காலத்தில் பல பதர்களையும் ,  மனித மிருகங்களையும் பதவி, பணம், அதிகாரம் , பழிவாங்கும் வெறியேரிய எத்தர்களை தாம் எதிர் கொண்ட போதும் உடன் பணியாற்றக் கூடியவர்களை எப்போதும் ஊக்கப்படுத்தி நன்னெறி காட்டக்கூடியவர். இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் கூட இயற்கையைப் போற்றுவதில் அலாதி விருப்பம் கொண்டவர். ஆண்டுதோறும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் மிக்கவர். இவர் முதல்வராக இருந்த போது கல்லூரியின்  பத்து ஏக்கர் பரப்பளவில்  கடவூர் வனச்சரகமும் கல்லூரியும் இணைந்து ஏழாயிரத்து இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டன .இப்பணியில் கரூர் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது பங்களிப்பும் இருந்ததால் பெருமையுறுகிறேன். இவரது பணிக்காலத்தில் அக்கல்லூரியில்  பயணித்ததை இன்றும் மறத்தற்கறியதாகவே... பசுமை மாறாமல் உள்ளதை நினைத்து பெருமைபடுகிறேன். 
03.07.21 ( குறிப்பு : மரக்கன்றுகள் நடுதலோடுத் தொடங்கிய இளைஞர் செஞ்சிலுவைச் சங்க விழா புகைப்படங்கள் )


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us