ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jul 06, 2022
வள்ளல் அய்யா த.சி.பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர்!
திருச்சி மாவட்ட பகுதியில் பெரும் செல்வந்தர்களாக வாழும் சமுகங்களில் முத்துராஜா சமுகம் ஒன்றாகும்.ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே நாம் வாழ்ந்துவருகிறோம்.அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட வட்டாரா பகுதிகளில் ஒரு நல்லது,கெட்டது என அனைத்திலும் முத்தரையர் சமுகத்தின் பங்கு முக்கியம் வாய்ந்தவையாக உள்ளது.அதன் வகையில் திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டத்தில் பல குளங்கள்,இடிகாடு,அரசுக்கு அலுவலக நிலம் போன்ற பல தானங்களும் செய்துள்ளனர்.
அவற்றில் ஒன்றாக திருச்சி நீதிமன்றம் அமைந்துள்ள நிலம் தானம் செய்த முத்தரையர்களில் அய்யா த.சி.பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் அவர்களும் முக்கியம் வாய்ந்தவர்.
அய்யா த.சி.பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் அவர்களின் வள்ளல் மனம் அனைவரும் அறியும்படி திருச்சி நீதிமன்றம் அருகிலே ஒரு பூங்காவுக்கு அய்யா அவர்கள் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
மேலும் அய்யா த.சி.பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் அவர்கள் அனைத்து மக்களுக்கும் பல தானங்களை செய்துள்ளார்கள்.
மேலும் 1906ல் திருச்சிராப்பள்ளி முத்துராஜா மகாஜன சங்கத்தை நிறுவியவர் அய்யா த.சி.பரங்கிரி வேலுப்பிள்ளை முத்துராஜ அவர்கள்.