அன்னை காளா பிடாரி போற்றி
Aug 03, 2022
💥💥💥💥💥💥💥தமிழகத்தின் ராஜ மாதா 🙏முத்தரையர்கள் குல தெய்வம் 🙏நியமம் அருள்மிகு சப்தகன்னியர் மாகாளாத்து காளா பிடாரி அம்மன் திருப்பாதம் போற்றி !!! 🙏குல தெய்வம் வணங்க வாருங்கள் நியமத்திற்கு🙏
🌟🌟🌟🌟🌟
ஆடி_பதினெட்டாம்_பெருக்கு
03.08.2022
🔥
ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசேஷத்திலும் விசேஷமாகும். இந்த நாளில் காவிரி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சிறப்பு பூஜைகள் செய்து நீராடுவார்கள்.
🔥
ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.
ஆடிப் பதினெட்டு என்னும் ஆடிப் பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது.ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை’ என்று பெயர்.அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.
உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று "பதினெட்டாம் பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
🔥
ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.அந்த புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு.
🔥
காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம். சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தையும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.
வளம் பெருக்கும் திருநாள்:
🔥
ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.
அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர்.ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.
🔥
மறக்காம கோலம் போடுங்க!
ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள்.
ஆடிப்பெருக்கு அன்று வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு குளம் நதி ஆகிய முக்கிய நீர்நிலைகளில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவர்.புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றுடன் புதியதாக மாற்றிக் கொள்வர். பெரும்பாலும் மூத்த சுமங்கலிகள் புதிய மஞ்சள் சரடு அணிவிப்பர்.
🔥
ஆடி பெருக்கு அன்று காவிரியில் குளித்து பூஜை செய்வது விசேஷமானது என்பதால் - காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் - படித்துறையில் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து வைத்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
பூஜையில் காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், எலுமிச்சங்கனி, காதோலை கருக மணி, வாசமுள்ள மலர்கள், வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து தூப தீப ஆராதனையுடன் கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர்.
பூஜை முடிந்ததும் காவிரியில் மஞ்சள் மற்றும் பூக்கள், காதோலை கருகமணி ஆகியவற்றை தாமரை இலையில் வைத்து அகல் விளக்குடன் மிதக்க விடுவர்.
சில இடங்களில் மாலை நேரத்தில் - விளக்கேற்றி பூஜை செய்து - தாமரை இலையில் விளக்கினை வைத்து - காவிரியில் மிதக்க விடுவர்.
🔥
காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும் பூஜையில் தேங்காய் பால் பொங்கல் நைவேத்யம் மற்றும் தேங்காய், புளி, தயிர் சாதங்கள் என சித்ரான்னம் படைத்து வழிபடுவதும் உண்டு.
🔥
நதிக்கரையில் கூடும் புதுமணத் தம்பதிகள் பட்டு வேட்டி பட்டுச் சேலை அணிந்து திருமண மாலைகளை ஆற்றில் மிதக்க விட்டு புது வெள்ளம் போல வாழ்வில் என்றைக்கும் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று வேண்டுவர்.
திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.
🔥
இதற்கெல்லாம் சிகரம் வைத் ததுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன் னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்’ கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.
🔥
பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!.
🔥
தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும்.மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர்.இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
ஆடிப்பெருக்கு பூஜையை காவிரிக் கரையில் செய்ய இயலாதவர்கள் வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.
🔥
வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி வைக்கவும். ஒரு செம்பில் - அரைத்த மஞ்சளை சிறிதளவு போட்டு சுத்தமான தண்ணீரால் நிறைத்து அதனை விளக்கின் முன் வைத்து தண்ணீரில் வாசமுள்ள பூக்களை இடவும்.
ஏதாவது ஒரு சித்ரான்னம் செய்து நிவேதனமாக வைத்து சாம்பிராணி தூபம் நெய் தீபம் காட்டி கற்பூர ஆரத்தி செய்யவும். கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபடவும். பின் செம்பிலுள்ள வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து உள்ளங்கை அளவு தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும். புனித நீர் மீதமிருந்தால் - செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும்.
🔥
சீரும் சிறப்பும் பெற்ற காவிரி - வரும் ஆண்டுகளில் - முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும். என்றும் குன்றாத செல்வச் செழிப்புடன் மக்கள் வாழ்வதற்கு காவிரியே கதி..
நடந்தாய் வாழி காவேரி !
நாடெங்குமே செழிக்க..... நன்மையெல்லாம் சிறக்க.....
நடந்தாய் வாழி காவேரி !!!
💪
இன் நன்னாளில் காவிரிக்கு கரை அமைத்து ,கல்லணை கட்டிய முத்தரையர் குல கரிகால் சோழன் பெருவளத்தான் புகழ் போற்றுவோம் ! 🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏ஆன்மீக சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி 🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com 🤘🤘🤘