|

அன்னை காளா பிடாரி போற்றி

Aug 14, 2022

அனைவருக்கும் வணக்கம் ! நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி அம்மன் திடலுக்கு பட்டா கேட்டு பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்து இருந்தோம்..... அதன் தொடர்ச்சியாக 10-08-2022 அன்று விசாரனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அரசு முத்தரையர் மன்னர்கள்   நியமத்தில் அன்னை காளா பிடாரி ஆலயம் அமைத்து வணங்கியதற்கான  ஆதாரங்களை கேட்டுள்ளனர். ஆகவே உறவுகள் தாங்கள் வசம் வைத்துள்ள ஆதாரங்கள், படங்கள்,ஆவணங்கள்,எத்தனை ஆண்டுகளாக நியமத்தில் மேற்கண்ட திடலில் வணங்கிவருகிறோம் என்பதை எழுத்து பூர்வமாக அனைத்து அமைப்புகளும் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். மேலும் அதன் நகலை  அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகரன் வசம் அல்லது அறக்கட்டளை நிர்வாகிகளிடம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 16-8-2022 அன்று திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணை இது குறித்த விசாரணை நடக்க உள்ளது.ஆகவே விரைந்து ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுகிறோம். அறவழியில் உரிய அரசின் அனுமதியோடு ஆலயம் அமைப்போம் ! ஒத்துழைப்பு தாரீர் ! 🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us