|

கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு

Aug 23, 2022

#அதிகம்_அறியப்படாத_முத்தரையர்_குடவறைக்கோவில்..

#எனது_வரலாற்றுத்தேடல்..!!!

#வாகீசர்_குடவறைக்_கோவில்
((என்ற))
#பள்ளிகொண்ட_பெருமாள்_குடவறைக்கோவில்
மலயடிப்பட்டி கிராமம்.

#மூலவர் : வாகீசர் // பள்ளிகொண்ட பெருமாள்
#அம்பாள்: வடிவுடை அம்மன் // கமலவல்லித்தாயார்.

#கோவில்_அமைவிடம்: மலையடிப்பட்டி கிராமம்-புதுக்கோட்டை தாலுகா-புதுக்கோட்டை கிராமம்.

#கோவில்_செல்லும்_வழி:இந்த கிராமம் கீரனூர-கிள்ளுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்நநுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 40-கிமீ தொலைவிலும்,கீரனூரிலிருந்து 20-கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

#கோவில்_அமைப்பு:: 

   இந்தக்கோவில் முழுவதும் கற்பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் சிறப்பு அம்சம் சிவ-விஷ்ணு சன்னதிகள் அருகருகே அமைந்திருப்பதாகும். கோவிலில் நுழைந்தவுடன் விஷ்ணு சன்னதியும், சற்று உயரே சிவ சன்னதியும் அமைந்துள்ளது.

  விஷ்ணு சயன நிலை, நின்ற நிலை, அமர்ந்த நிலை ஆகிய மூன்று நிலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளார். சயன நிலை விஷ்ணுவின் கீழே இரு தேவியரான பூதேவி, ஸ்ரீதேவியும், மேலே பிரம்மனும் அமைக்கப்பட்டுள்ளனர். சயனநிலை விஷ்ணுவுக்கு அருகே நரசிம்ம அவதாரமும், வைகுந்த பெருமாள் சிற்பமும் ஒரே கல்லினால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

  விஷ்ணு கோவிலுக்கு சற்று உயரே உள்ள சிவசன்னதியில், சிவன் சுயம்புலிங்கராய் அமைந்துள்ளார். சிவபெருமானை பார்த்தபடி நந்தியும், எதிர்ப்பக்க சுவற்றில் சங்கரநாராயணன், கொற்றவை சிற்பங்கள் குடவறையாய் அமைக்கப்பட்டுள்ளன.

  இக்கோவில் ராஜகோபுரம் இன்றி ஒரு மாடக்கோவில் போல் அமைக்கப்பட்டுள்ளது.

#வரலாற்று_சிறப்பு: 

   இந்த குடவறை கோவிலானது #எட்டாம்_நூற்றாண்டில்,  #நந்திவர்ம_பல்லவரின் 16-ஆவது ஆட்சிக்காலத்தில்,  பல்லவர்களின் நம்பிக்கைகக்குறிய பலம் பொருந்திய தலைவரான #விடில்விடுகு_முத்தரையர்  என்ற குறுநில மன்னரால் 812 CE-எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக்கிராமம் முழுவதிலும் உள்ள கோவில்கள் மட்டுமன்றி #நார்த்தாமலையில் உள்ள #விஜயாலயசோழீஸ்வரம் சிவன் கோவிலும் இந்த முத்தரைய மன்னரால்தான் கட்டப்பட்டுள்ளது.

#கல்வெட்டுக்கள்: இக்கோவிலில் குலோத்துங்க சோழர்,  இராஜேந்திர சோழர், மற்றும் வீர ராஜேந்திரன் கால கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், நன்கொடைகள், வரிவிலக்கு அளிக்கப்பட்ட கோவில் நிலங்கள் பற்றி நமக்கு தெரிவிக்கின்றன.

 இந்தக்கோவில் இந்தியதொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் ((ASI)) பராமரிக்கப்படுகிறது.

  இந்த வரலாற்று சிறப்புமிக்க, அதிகம் அறியப்படாத குடவறைக்கோவிலில் நான் எடுத்த புகைப்படங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us