அருள்மிகு அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் அருளாலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
Aug 27, 2021- ஆலயம் பற்றி
அருள்மிகு அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் அருளாலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆசியினாலும் .....
வரலாற்று மீட்டுருவாக்கம் அடிப்படையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை தொடர்ந்து நியமத்தில் குல தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு வருகிறது. நம் உறவுகள் நியமத்தில் குல தெய்வத்தை வணங்கிய காரணத்தால் 600 மேற்பட்ட வரன்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.பேரரசர் அபிசேக பாலை அருந்தியவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்துள்ளது. பக்தர்களின் வேண்டுதலை அன்னை காலா பிடாரி நிறவேற்றி தருகிறாள்.
பவுர்ணமி மற்றும் அம்மாவாசை தினங்களில் வழிபாடும் ,அன்னதானமும், ஜோதிடமும் ,பக்தர்களுக்கு தீர்த்தம் அடித்தல் வைபோகம் நடைபெரும் ????கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக இன்று நமக்கு காட்சி தந்து அருளாட்சி நடத்துகின்றாள்.... அன்னை காலா பிடாரி . முத்தரையர் வரன் தேடல் குழுவின் சார்பாக அருள் மிகு கோட்டை முனியாண்டவர் சிலையும் பீடமும் 22-08-2021 அன்று அன்னை காலா பிடாரி கோட்டை வளாகத்தில் அமைத்து வணங்கி வருகிறோம் !
அதன் தொடர்ச்சியாக 26-08-2021 அன்று சமயபுரம் ,கூத்தூர் சக்தி உபாசகர் ராதா கிருஷ்ணன் அவர்களின் திருக்கரங்களினால் கோட்டை முனியாண்டவருக்கு அபிசேகம்.... ஆராதனை நடத்தப்பட்டது.
அனைவரும் கோட்டை முனியாண்டவர் தரிசனம் செய்ய வாருங்கள் நியமத்திற்கு.
நேமம் , திருக்காட்டுப்பள்ளி அருகில், தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு 9600569891