|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Oct 28, 2022

ரேநாட்டு சோழ முத்துராஜா 

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், கலமல்லாவில் கி.பி 5-ம் நூற்றாண்டை சேர்ந்த தெலுங்கு பகுதியில் ஆட்சி செய்த, காவிரிக்கு கரை கட்டி அதில் கல்லணை கட்டிய மாமன்னர் கரிகாலசோழன் முத்தரையர் வழிவந்த ரேநாட்டு சோழர்கள் தனஞ்சய சோழ முத்துராஜா கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் மிகப் பழைமைவாய்ந்த கல்வெட்டாகும். சோழர்களின் முதல் கல்வெட்டும் இதுதான். 

இந்த கல்வெட்டிற்கு  விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் மத்திய தொல்லியல் துறையினர்கள் 1947 - 1948 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்ட "Epigraphia India Vol 27" -ல் இக்கல்வெட்டு சமந்தமாக விளக்கம் அளித்துள்ளனர். 

கலமல்லா கல்வெட்டு செய்தியில், ரேநாட்டு சோழர் வம்சத்தினரே முதன் முதலில் முத்துராஜா பட்டம் தாங்கியவர்கள் என்று அறியமுடிகிறது. முத்துராஜா என்றால் ரேநாட்டு சோழர் வம்சத்தின் இளைய மரபினர் என்று இதற்கு ஆதாரமாக மத்திய அரசின் "Epigraphia India Vol 27" நூலில் கலமல்லா சோழர் கல்வெட்டில் சோழர்கள் முத்துராஜா பட்டம் தாங்கியவர்கள் என்றும், இந்த முத்துராஜா பட்டமே பின் நாட்களில் முத்தரையர் என்று மருவியதாகவும் மத்திய தொல்லியல் துறையினர்கள் கூறுகின்றனர். 

முத்தரையர் மன்னர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் தெலுங்கு பகுதியில் ஆட்சி செய்த ரேநாட்டு சோழர் மரபினர் என்று அரசாங்கமே அறிவித்துள்ளது. 

இதன் மூலம் முத்தரையர்கள் சோழர் மரபினர்கள் என்றும் அவர்களே முதன் முதலில் முத்துராஜா பட்டம் தாங்கியுள்ளனர் என்றும் பின் நாட்களில் தஞ்சாவூர் பகுதிக்கு இடம் பெயரும் போது முத்துராஜா சொல்லின் தமிழ் சொல்லாடலான முத்தரையர் என்ற தமிழ் வடிவப் பெயரை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் என்று தெளிவாகுகின்றது. 

முத்து(ராஜா) என்னும் சோழ இளவரசருக்கான பட்டமே பின் நாட்களில் முத்து(அரையர்) என்று உருப்பெற்றது. ராஜா என்ற தெலுங்கு சொல்லின் தமிழ் வடிவம் அரையர் ஆகும். முத்துராஜா முத்தரையராக மாறியது இதன் மூலம் தான் என்று தெளிவாகுகின்றது இதையே, தொல்லியல் துறையும் கூறுகின்றது. 

முத்துராஜா என்ற சொல்லாடளின் மற்றொரு வடிவமே முத்தரையர். 

முத்து+ராஜா = முத்து+அரையர்

ராஜா என்றாலும் அரையர் என்னாலும் ஒரே பொருள்தான். 

தெலுங்கில் ராஜா 
தூய தமிழில் அரையர்

ராஜா = அரையர் 

அரையர் என்றால் அரசர் என்று பொருள். 

இதை கலமல்லா சோழர் கல்வெட்டு தெளிவுப்படுத்துகிறது. 

*முதி, முது என்பதற்கு மூத்த என்று அர்த்தம். 

*முத்துராஜா என்ற தெலுங்கு சொல்லாடலின் தமிழ் வடிவம் முத்தரையர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us