|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 03, 2022

பெரும் பிழையாக எழுதப்பட்ட வரலாறு விசயால சோழன் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றினான் என்பது.

முத்தரையர்களிடமிருந்து  தஞ்சையை கைப்பற்றினான் என்பதற்கு சான்றாக சொல்லப்படும் திருவாலங்காடு செப்பேடு சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.அந்த செப்பேடு இப்படிக் கூறுகிறது  "விசயாலன் குபேரனின் அளகாபுரியை ஒத்த தஞ்சாபுரியை அழகான கண்களையுடைய தன் மனைவியை கரம் பிடிப்பது போல் இலகுவாக பிடித்தான்".எந்தவொரு கணவனும் தன் மனைவியின் கரங்களை பெரும்போர் செய்து கைக்கொள்ளமாட்டான்.

உண்மையாகவே அங்கே போர் நடந்திருந்தால் அது எந்த இடத்தில் நடந்தது,யாருக்கும் யாருக்கும் நடந்தது என்பதை நிச்சயமாக கடந்திருக்க மாட்டார்கள்.

சாத்தன் பூதி (எ) இளங்கோவதியரையனுக்கு பிறகு வாரிசுரிமையின் அடிப்படையிலேயே  விசயால சோழன் சோழ அரசானாக முடிசூடிக் கொண்டான் என்பதே வரலாறு.

சோழர்களே முத்தரையர்கள்! முத்தரையர்களே சோழர்கள்!!

இராச ராச சோழனை போற்றி வணங்குவோம்!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us