|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 12, 2022

#கொடும்பாளூர்_சூரியகுல_முத்தரையசோழர்கள்: 

#பாண்டியர்களை_கொடும்பாளுரில் போரிட்டு வென்ற பேரரசர் #பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் கொடும்பாளுரை தனது வசமாக்கினார்... அதன்பிறகு கொடும்பாளுரில் ஆட்சிக்காக அமர்த்தப்பட்டவர்கள் #வேள் என்ற பட்ட பெயரை கொண்டவர்கள்... முத்தரையர்களால் அமர்த்தப்பட்டவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?.வேள் பட்டம் கொண்ட முத்தரையர்களே வேளார் என்று அரியப்பட்டார்கள்... கொடும்பாளுரில் ஆட்சியில் இருந்த #இருக்குவேள் என்பவர் #முத்தரையர் #மகளை_திருமணம் செய்திருக்கிறார்... இதை கல்வெட்டில் காணலாம்.. அதாவது #இருக்குவேளாரின்_தேவியாரும் (மனைவி ) #முத்தரையரின் #மகளளுமானவர் நெந்த விளக்கு எரிப்பதற்கு கொடுத்த பொன் கொடுத்தது பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது... இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இருக்குவேளாரின் மனைவி என்று மட்டும் கூறாமல் தான் முத்தரையரின் மகள் என்பதை அவர் பெருமையோடு கூறி கல்வெட்டில் பொறிக்க செய்திருக்கிறார்.அதே வேளையில் முதல் #ஆதித்த #கரிகாலனின் மகனான #பராந்தக #சோழனின்  மகள்கள் வீரமாதேவி மற்றும் அனுபமா என்று இரண்டு மகள்கள் ஆவார்கள். இந்த இரண்டு மகள்களையும் திருமணம் செய்தவர்கள் முத்தரையர்கள்.  #வீரமாதேவியை #வல்லது_முத்தரையனான #வல்லவரையனும் இரண்டாவது மகள் #அனுபமாவை_கொடும்பாளூர் #முத்தரையரும்_திருமணம் செய்தார்கள். கொடும்பாளுரில் ஆட்சியில் இருந்த வேளார்கள் வேற்று ஆட்கள் என்றே வைத்துக்கொள்வோம்... அப்போ #கொடும்பாளுரில் இருந்த முத்தரையன் #சோழ மன்னரின் பெண்ணையே திருமணம் செய்கிற அளவிற்கு இருந்த #முத்தரையன் யார்? சோழ மன்னரின் மகளை திருமணம் செய்த கொடும்பாளூர் முத்தரையன் கொடும்பாளூர் அரச குடும்பமாக இருந்திருந்தால் மட்டுமே இது நடந்திருக்கும். நன்றி 🙏🏻


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us