|

கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு

Nov 16, 2022

🔥🔥🔥 குடிமல்லத்தையும் முந்தும் தமிழகத்தின் மிகப் பெரிய 11 அடி உயர பழமையான  சிவலிங்கம் கண்டுபிடிப்பு 
🙏
🕉️ நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியம்,, சாணார்பாளையம் எனும் ஊரின் கரும்புக் காட்டில் 11 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிப்பு. 
🔥
🕉️ திரு. நடராஜ் அவர்களின் கரும்புத் தோட்டத்தின் மையத்தில் 8 அடி நிலத்திற்கு மேலும் 3 அடி  நிலத்தின் கீழும் ஊன்றியுள்ளது. 
🔥
🕉️ பிரம்ம சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றைப்  பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது.
🙏
🕉️ முற்காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும் லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திர குறியீடை வைத்து பார்க்கும் பொழுது ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
🔥
🕉️ ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிமல்லம் சிவலிங்கம் மிகவும் பழமையானது என்று கருதி வந்த நிலையில், அதே போன்று லிங்க பாணத்தின் பிரம்ம சூத்திர குறியீடு முதன் முதலில் அமைக்கப்பட்ட Projection அமைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

🕉️ இப்பழமையான லிங்கத்தை கரூர், நாமக்கல் மாவட்ட  சிவனடியார்கள் வழிபாடு செய்தனர்.

🙏🙏🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us