கற்றளிகோயில் வரலாற்றில் முத்தரையர்கள் பங்கு
Nov 18, 2022
தஞ்சை முத்தரையர் ஆட்சி நடைபெறும்பொழுதே #சுந்தர_நந்தா, கோகிளி மற்றும் இரண்டாம் மகேந்திர சோழன் ஆகியோர் தங்களை #உறையூர்_கோன் என்று பதிவு செய்துள்ளனர்.
பெரும்பிடுகு முத்தரையன் மற்றும் ஏனைய முத்தரைய ராஜாக்கள் சைவ தொண்டு ஆற்றிய சமயத்தில், தெலுங்கு சோழ அதிராஜாக்கள் உறையூரில் வீற்றிருந்து #வைணவர்களை ஆதரித்துள்ளனர் என்பதனை அறியமுடிகிறது.
மலையடிப்பட்டியில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு என்று இரு குடைவரை கோயில்கள் இருந்தாலும், குவாவன் சாத்தன் முத்தரையன் கல்வெட்டானது சிவன் குடைவரை கோயிலை எடுப்பித்ததாக கூறுகிறது.
(படம் - குவாவன் சாத்தன் முத்தரையன் எடுப்பித்த மலையடிப்பட்டி வாகீஸ்வரம் சப்தகன்னியர் - விநாயகர்)