|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Nov 23, 2022

பழையாறை சோழன் மாளிகையில் கிடைக்கக் கூடிய சுட்ட செங்கற்கள் .இடது பக்கம் இருந்து முதல் செங்கல் சங்க காலத்தையது.சுமார் 18 முதல் 24 அங்குல நீளமும் 6 முதல் 8 அங்குல அகலமும் கொண்டவையாக உள்ளன. இரண்டாம் செங்கல் பிற்கால சோழர் காலத்தையது.சுமார் 12 அங்குல நீளமும் 6 அங்குல அகலமும் கொண்டுள்ளன. மூன்றாம் செங்கல் 8 அங்குல நீளமும் 6 அங்குல அகலமும் கொண்ட இவை நாயக்கர் , மராட்டியர் காலத்தைச் சேர்ந்தவையாகும். நான்காவதாக இடம்பெற்றுள்ள செங்கல் காசுக்காக, பணத்திற்காக, பதவிக்காக வாயினாலேயே ஜால்ரா இசைக் கருவியை மீட்டக்கூடியவர்கள் வாழும் இக்காலத்தைச் சேர்ந்தவையாகும்.இவை 8 க்கு 4 ஆகும். சங்க காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சுட்ட செங்கல்லும் பதப்படுத்தப்பட்ட சுண்ணத்தையும் கொண்டு கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். கடுக்காய் ,பனை வெல்லம் இரண்டையும் வாரக்கணக்கில் ஊற வைத்து நொதித்தப்பின் சலிக்கப்பட்ட சுண்ணாம்போடு இவுவூறலைச் சேர்த்து , பின் முட்டை வெள்ளைக்கருவையும்  வட்ட வடிவ குழியிலிட்டு மாடு பூட்டி மூன்று முதல் ஒரு வாரம் மசித்து ( மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும் முறையை ஒத்தது) எடுத்தால் அக்கலவை பசை போலிருக்கும்.  இதனை அள்ளி வைக்காமல் செங்கற்களில் தடவி கற்களைக் கலை நயம் மிக்க கட்டிடங்களாக மாற்றும் தொழில் நுட்பத்தைத் தமிழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து  வருகிறான். இத்தகுக் கட்டிடங்கள்  போரில் மண்ணாசைக் கொண்ட அரசர்களால் இடிக்கப்பட்டாலன்றி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே நிற்கின்றன. 

குறிப்பு: பொறியியல் கல்லூரிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும்  இருக்கின்றன. தெருவிற்கிரண்டு பொறியியல் கல்லூரிகள் மலிந்த காலத்தில் கட்டப்படும் கட்டிடங்கள் பத்தாண்டுகளில்  பல்லைக் காட்டுகின்றன. 
    ..........பயணி..........
சோழ வளநாட்டு காவிரி கூற்றத்து பூந்துருத்தி , ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்ந்தோன் மாறன் யுத்தகேசரி முனைவர் ஆறுமுகம் ஜெகதீசன் பிற்கால சோழர் தலைநகர் பழையாறையிலிருந்து
முனைவர் ஆ.ஜெகதீசன்
          23.11.22


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us