ஆன்மீகம்
Nov 29, 2022
முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள
#பேரங்கியூர்
#திருமூலநாதர் என்ற #மூலஸ்தானமுடையார் திருக்கோயில் வரலாறு:
விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் இருக்கிறது பேரங்கியூர் எனும் கிராமம். இங்கு மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோயில் ஒன்று உள்ளது.
மூலவர்: மூலஸ்தானமுடையார்
அம்மன்: அபிராமி அம்மன்
ஊர்: பேரங்கியூர்
புராண
பெயர்: திருமுனைப்பாடி
வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம்: விழுப்புரம்
காலம்: 10 ஆம் நூற்றாண்டு (முதலாம் பராந்தக சோழன்)
அருள்மிகு திருமூலநாதர் எனும் திருப்பெயருடன் சிவபெருமான் குடியிருக்கும் இந்தக் கோயில், பாண்டியன் ராஜசிம்மனை வீழ்த்தி மதுரையை வெற்றிகொண்ட சோழன் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது. அளவில் சிறியதுதான் என்றாலும் சிற்ப அழகும், கட்டுமான நுட்பங்களும் கொண்ட இந்த ஆலயம், கிழக்கு நோக்கியது.
திருக்கோயில் அமைந்துள்ள பேரங்கியூர், முற்காலத்தில் பேரங்கூர் என்று வழங்கப்பட்டதாம். திருமுனைப்பாடி நாட்டில் அமைந்த இவ்வூர், பிரம்மதேயமாக அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட தகவல், இங்குள்ள கல்வெட்டுகளில் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அக்காலத்தில் இந்தக் கோயில் திருமூலஸ்தானமுடைய கோயில் எனவும், இறைவன் ‘திருமூலஸ்தானமுடைய மகாதேவர்’ எனவும் அழைக்கப்பட்ட தகவலும் உண்டு.
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும். திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வரலாற்றுச் செய்திகள்:
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில பராந்தகன் கால சிவன் கோயில் உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்ம தேயமாக இருந்துள்ளது. கோயில் பெயர் ரூலஸ்தானமுடையார் கோயில் என்றும் இறைவன் ரூலஸ்தானமுடைய மஹாதேவர் என அழைக்கப்பட்டுள்ளார். புராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன.இராஜராஜன் காலத்தில் கோயில் பணிகளைக்யீ கவணிக்க ஸ்ரீருத்ர கணப்பெருமக்கள் நியமிக்கப்பட்டனர் என்று ஒரு கல்எவட்டு கூறுகிறது. கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்ட காலத்தவையாகும். முகமண்டபம் பிற்காலத்தது ஆகும்.இக்கோயில் அதிஷ்டானம் முதல் கபோதகம் வரை கற்றளி, பிறகு விமானம் செங்கல்லும் சுதையும்ளூ கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கருவறையில் மேற்கு சுவரில் அதிஷ்டானப் பகுதியில் அளவு கோல் ஒன்று காணப்படுகிறது. இக்கோல் 365 செ.மீ நீளம் கொண்டுள்ளது. சோழர் காலத்தில் இந்த அளவுகோல் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். கோயிலில் வித்யாசமான எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபத் தென்புற கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் உள்ளது. இவருக்கு பின்புறம் குடையும் இரு சாமரங்களும் உள்ளன. இவருடைய சதுர் புஜங்களில் மானும் அம்பும் ஏந்தியிருப்பது சிறப்பாகும். தென்புறக் கோட்டத்தில் உள்ள ஆலமர்ச் செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த நிலையில் உள்ளது.மேலிருகரங்களில் அக்ஷமாலையும் உடுக்கையும் கீழ்க்கரங்களில் சுவடிகளை ஏந்தும் சின்முத்திரை தாங்கியும் உள்ளன. கோயிலின் தென் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷப்தமாதர், ரூதேவி, சண்டிகேஸ்வரர், விநாயகர்ச சிற்பங்கள் எழில் மிக்கவை. தமிழக அரசு தொல்லியல் துறை இக்கோயிலைப் பராமரித்து வருகிறது.
கல்வெட்டு :
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்:
திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. பக்கவாட்டில் ஒருக்களித்து தன்னுடைய இயல்பான லளிதாசனத்தை விட சற்று இடப்பக்கம் சாய்ந்தவாறு அமர்ந்துள்ளார். அவருடைய தோள்கள் மனிதனுடைய இயல்பான தோற்றத்தை ஒத்திருக்கிறது காணத்தக்கது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும்.
கோயிலின் அமைப்பு:
திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அமைவிடம் :
சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது
திருச்சிற்றம்பலம் 🙇
ஓம் நமசிவாய🙏