|

ஆன்மீகம்

Jan 02, 2023

108 வைணவ தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்
கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் காரமடை ரங்கநாதர் ஆலயம் ஆகும்

காரமடை ரங்கநாதர் ஆலயத்தில் முத்தரையர் குல மாமன்னர் திருமங்கை ஆழ்வார் அவர்களின் வாரிசுகளான முத்தரையர்களுக்கு தனி மண்டபக் கட்டளை திருமங்கை மன்னர் வேடுபரி நிகழ்வில் முத்தரையர்களுக்கு என்று தனி மரியாதை தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது 

 காரமடை சுற்றியுள்ள நம்  முத்தரையர் உறவுகள் தொடர்ந்து 55 ஆண்டு காலமாக மிக சீரும் சிறப்புமாக இந்த விழாவை நடத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

இன்றைய (01-01-2023) புத்தாண்டு தினத்தில் நாம் அந்த பகுதிக்கு முக்கிய நிகழ்வுக்காக சென்றிருந்தோம் அப்பொழுது நம் உறவுகள் மிக தெளிவான முறையில் காரமடை ரங்கநாதர் கோவிலில் முத்தரையர்களுக்கு வழங்கப்படும் மண்டப கட்டளை குறித்தும் மரியாதைகள் குறித்தும் மிகத் தெளிவான முறையில் கருத்துக்களை நம்மிடத்தில் முன் வைத்தார்கள்

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை உலகெங்கும் வாழும் முத்தரையர்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு இன்றைய தினம் இந்த பதிவு மூலமாக தெரியப்படுத்துவதில்    பெரும்
 மகிழ்ச்சி  கொள்கிறோம்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us