|

ஆன்மீகம்

Jan 06, 2023

திருமங்கையாழ்வார் முத்தரையர் அவர்களின் உன்மையான வரலாறு கண்டிப்பாக படியுங்கள் அனைவருக்கும் பகிருங்கள் நமது வரலாற்றை....

சோழப் பேரரசில்படைத்தலைவராக இருந்த திருமங்கை முத்தரையர் மன்னன், திருவரங்கப் பெருமாளிடம் கொண்ட பக்தியால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்தார். போதுமான நிதியில்லாத நிலையில், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டு திருப்பணியை தொடர்ந்தார். அவரை திருத்துவதற்காக மாறுவேடத்தில் வந்த பெருமாளையும் வழிமறித்தார் திருமங்கைமன்னன்.
அப்போது பெருமாள், திருமங்கை முத்தரையர் மன்னன் காதில் ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தை ஓதினார். இதன் மகிமையால் திருமங்கைமன்னன் மனம் திருந்தி திருமங்கையாழ்வாராக மாறினார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில்வேடுபறி நிகழ்ச்சிஎனும் பெயரில் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில்ஆண்டுதோறும் மார்கழி மாத இராப் பத்து திருவிழாவின் எட்டாம் நாள் மாலையில் பக்தர்களுக்கு நடத்திக் காண்பிக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் திருமங்கையாழ்வார் முத்தரையர் வேடுபறி எனும் பெருவிழா...!!

விழாவிற்கு துவக்கமாக திருமங்கையாழ்வார் முத்தரையர் மரபில் வந்த ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெருவில் வசிக்கும் முத்துராஜா" குடும்பத்தின் இளைய வாரிசுகள் தங்கள் வீட்டிலிருந்து தாரை, தம்பட்டை, மேளதாளங்கள் உள்ளிட்ட அத்தனை இசைக்கருவிகளும் முழங்க,விண்ணதிரும் வாணவெடிகளோடு, வாள்வீச்சும், சுருள் கம்பியும், வேல்கம்பியும், கம்பும் சுற்றி சுழல "வாள்களோடு" புறப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னும் பின்னும் அணிவகுக்க‌, தெருமுனையில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட பிறகு தலைப்பாகையை சூடிக்கொண்டு "திருமங்கையாழ்வாராய்" அவர்தம் வாரிசுகள் அதே அத்தனை இசைகருவிகளும் முழங்க ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வீதி வீதியாக வலம் வருகிறார்கள், பல்வேறு வீதிகளை கடந்து ஸ்ரீரங்க நாதரின் ஆலய முகப்பை அடைகின்றனர்,

ஆலயத்தில் கூடி நிற்க்கும் ஆயிரமாயிரம் வெளிநாட்டவர், உள்நாட்டவர் என்று அத்தனை பேரும் பரவசத்தோடு கண்டு மெய்மறந்து நிற்க ஆலயத்துக்குள் ஆர்பாட்டத்தோடு நுழைகிறது "திருமங்கயாழ்வாரின் முத்தரையர் பெரும்படை" உள்ளே நுழைந்து நேராக சந்துனு மண்டபத்தில் வீற்றிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து, அவரையும் கூட்டிக்கொண்டு ஆரியப்பட்டாள் வாசல் வழியாக மணல்வெளிக்கு வருகிறார்கள்.

திருமாலுக்கு தொண்டு செய்தே தனது சொத்துக்களை இழந்த நீலன் என்னும் திருமங்கை மன்னன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இந்த ஆலயத்தை கட்ட துவங்கி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஆலயப்பணி முழுமை பெறாமல் போய்விடுமோ என்று அஞ்சி செல்வந்தர்களிடம் வழிப்பறி செய்தாவது ஆலயப்பணியை நிறைவு செய்திட துணிகிறான், திருமங்கை மன்னனை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் விளையாட்டு காட்டி மணமகன் வேடம் பூண்டு வீதியில் வர அவரின் பொருட்களை வழிப்பறி செய்கிறார் திருமங்கை மன்னர், எல்லா ஆபரணங்களையும் பறித்தவரால் மணமகன் வேடத்தில் இருந்த பெருமாள் காலில் அணிந்திருந்த நகையை மட்டும் கழற்ற முடியவில்லை, பல்லால் கடித்து கழற்ற முயன்றபோது பகவானின் ஸ்பரிசம் பட்டு தான் வழிப்பறி செய்துக்கொண்டு இருப்பது பெருமானிடம் என்பதை உணர்ந்த நீலன் என்னும் திருமங்கை முத்தரையர் மன்னன் பெருமாளிடம் சரணகதியாகிறார்.

அப்போதுதான் "ஓம் நமோ நாராயணா" எனும் மந்திரத்தை உபதேசித்து திருமங்கை மன்னனை தன்னுடைய ஆழ்வாராய் பெருமான் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஆலயத்தின் உள்ளேயுள்ள மணற்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்பு நடந்தேறுகிறது. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் காண கண்கோடி வேண்டும்,

இந்த நிகழ்வுகளின் இறுதியில் முத்தரையர் மக்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு தொடங்குகிறது.பரிவட்டம் கட்டி பகவானின் ஸ்பரிசம்பட்ட காய்ந்த மாலைகள், பெருமானின் நெற்றியில் பூசப்பட்டிருந்த சந்தனம் அத்தனையும் வழங்கி மரியாதை செய்யப்படுகிறது, இந்த ஒரு நிகழ்வில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் முத்தரையர் மக்கள் தவிர வேறு ஒருவருக்கும் இந்த மரியாதை வேடுபறி நிகழ்வில் கிடைக்காது. இறுதியில் பெருமான் ஆயிரங்கால் மண்டபம் செல்ல வேடுபறி இனிதே நிறைவுற்றது.

ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இருந்து ராப்பத்து நிகழ்வின் எட்டாம் நாள் வேடுபறி நிகழ்ச்சி இனிதே நடந்துகொண்டு இருக்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் வேடுபறி நிகழ்வில் பெருமிதத்தோடு கலந்துகொள்வோம்.

இந்தாண்டு (09.01.2023) வேடுபறி விழா அனைவரும் வருக வருக...

இப்படிக்கு :

அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us