|

07-09-2019 அன்று நியமத்தில் தேவபிரசன்னம் நடத்தப்பட்டது

Sep 07, 2021

அனைவருக்கும் வணக்கம் ????

அருள் மிகு மாகாளாத்து காலா பிடாரி,காலா பிடாரனேஸ்வரர்,பேரரசர் சுவரன்மாறன், கோட்டை முனியாண்டவர் ஆசியினால் 07-09-2019 அன்று நியமத்தில் தேவபிரசன்னம் நடத்தப்பட்டது.

நம் குல தெய்வ அருளாலும்,சமுதாய முன்னோடிகளின் ஆசியினாலும் நியமத்தில் நாம் நம் குல தெய்வ ஆன்மீக கோட்டை கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேவ பிரசன்னத்தில் குறிப்பிட்ட படி பரிகார பூசைகள் நடத்தப்பட்டு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.  பதிவு எண் 62/2020 அமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது.  நாம் நியமத்தில் அன்னை காலா பிடாரி சூலத்திலும், பேரரசர் சிலை மற்றும் ஈட்டி, அம்மன் முகம், 71/2 அடி உயர கோட்டை முனியாண்டவர் சிலை, மடப்பள்ளி முதலானவற்றை இரண்டாண்டுக்குள் நிறுவி உள்ளோம்.

மேலும் நியமத்திற்கு வந்து அன்னை காலா பிடாரி வணங்கிய அனைவருக்கும் (700மேற்பட்ட வரன்களுக்கு) திருமணம் நடைபெற்றுள்ளது. பலரும் நம் குல தெய்வத்தை வணங்கி தெய்வ அருள் பெற்றுள்ளனர். மேலும் பேரரசர் அருளால் வல்லம் கோட்டை அகழாய்வு நடத்த தொல்லியல் துறையிடம் அகழாய்வு நடத்திட முதல் கட்ட ஆணையை பெற்றுள்ளோம். நியமத்தில் 1008 லிங்கங்களை மீட்க தொடர்ந்து அரசிடம் போராடி வருகிறோம். தொடர்ந்து அறக்கட்டளை பணிகள் நடைபெற நன்கொடையாளர்கள்  பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். இந்த அறப்பணிகளின் வெற்றியை சமுதாய முன்னோடிகளுக்கு சமர்ப்பணம்.????

மேலும் நியமத்தில் மடப்பள்ளி அமைத்து தந்த சமுதாய காவலர் அய்யா ஆர்.வி. அவர்களுக்கு நன்றி.பேரரசர் சிலை அமைக்க நன்கொடை வழங்கிய மதுரை  திரு திவாகர் IRS அவர்களுக்கும் நன்றி ! கோட்டை முனியாண்டவர் சிலை மற்றும் பீடம் அமைத்து தந்த முத்தரையர் வரன் தேடல் குழுவிற்கும் அதன் பொறுப்பாளர்கள் கரூர் சங்கரன் தங்கதுரை, ஈரோடு செல்வராஜ் அவர்களுக்கும் நன்றி !  அறக்கட்டளை இணைய தளம் ( wwwaraiyarsuvaranmaran.com) அமைத்து கொடுத்த உறையூர் மேட்டுத்தெரு N. M. சுந்தர்ராஜன் அவர்களுக்கும் நன்றி !

மேலும் பல வகையில் துணையாக இருந்தவர்களுக்கும் .... நன்கொடையாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி !  அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி !

ஆன்மீக மெய்யன்பர்கள் அனைவருக்கும் நன்றி ! வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு ! திருச்சிற்றம்பலம் ????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us