|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Feb 27, 2023

செம்பூதி
(முத்தரையர் மன்னர் பெயரில் உறுவாகிய ஊர்)

செம்பூதி அமைவிடம்: 
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியத்தில் கொன்னையூர் அருகே அமைந்துள்ள அழகிய ஊராகும்.

செம்பூதி  பெயர் வரலாறு;
              செம்பூதி என்னும் பெயரானது முத்தரையர் மன்னர்களில் ஒருவரான சாத்தன்பூதி முத்தரையர் என்னும் மன்னரின் பெயரில் உருவாகிய ஊராகும்...
             தமிழகத்தில் தலைசிறந்து ஆட்சி நடத்தியவர்கள் முத்தரையர் மன்னர்கள்.கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு தொடக்கம் வரை இவர்களின் ஆட்சியே தஞ்சை,புதுகை,திருச்சி, நடைபெற்றது.வலையர் குடியில் பிறந்த முத்தரையர் மன்னர் தங்களின் முத்தரையர் நாட்டை செலிப்பாக ஆட்சி நடத்திவந்தனர்...
அதற்க்கு சான்றாக முத்தரையர்களின் கோவில்கள்,கல்வெட்டுகள்,ஏரி,மடை,செப்புபட்டையம் என பல சான்றுகள் குவிந்துள்ளது...

சாத்தன்பூதி முத்தரையர்:
                           ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய புதுக்கோட்டை பகுதிகளை பெரும்பகுதிகளை ஆண்டுவந்தவர்கள் முத்தரையர்கள் அதிலும் சாத்தன் என்ற பட்டம் கொண்ட முத்தரையர்களே அதிகமாக ஆண்டுள்ளதாக பல கல்வெட்டுகள் உணர்த்துகிறது.குறிப்பாக நார்த்தாமலை,திருமயம்,பூவாலைக்குடி  என பல கோவில்களை எடுப்பித்தர்கள் முத்தரையர்கள் அதிலும் சாத்தன் என்ற பெயர் கொண்டவர்களே அதிகம்...

நார்த்தாமலை சாத்தம்பூதிச்சுரம் கோவிலில் உள்ள கல்வெட்டு
    “ஸ்வஸ்தி ஸ்ரீ செம்பூதியான
   இளங்கோவதி யரையர் எடுப்பித்த கற்றளி
    மழை இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின தென்னவன் தமிழதிரையர் புதுக்கு”

என்று அக்கல்வெட்டு அமைந்துள்ளது.
அதாவது செம்பூதி என்பது சாத்தன்பூதி என்ற மன்னரால் எடுப்பித்த கோவில் மழையால் அழிந்துபோக மல்லன் விதுமனாகிய தென்னவன் தமிழதியரையன் இதை புதுப்பித்ததாக பொறிக்கப்பட்டுள்ளது....
இதில் செம்பூதி என்பது சாத்தன்பூதி என குறிக்கிறது.
எனவே புகழ்பட வாந்த சாத்தன்பூதியின் ஆட்சி காலத்திலே அவன்பெயரிலே செம்பூதி என்ற ஊரை அமைத்து சிறப்பாக ஆண்டுள்ளார் என்பதினை தெளிவாக எடுத்துரைக்கிறது...

செம்பூதி என்னும் ஊரானது ஆயிரம் ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்க்கிறது என்பது பெருமைக்குறிய வரலாற்று ஊராக செம்பூதி முத்தரையர் ஊர் அமைந்துள்ளது.

செம்பூதி நாடு:
              கிராம நாட்டு பிரிவில் செம்பூதி என்னும் நாடு அமைந்துள்ளது.இந்தநாடு கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் நாடு திருவிழாவில் நான்காவது  நாடாக உள்ளது.இதில்  பாளையப்பட்டு  நாயக்கருக்கும், முத்தரையர் மக்களின் செம்பூதிநாட்டு அம்பலம் அவர்களுக்கும் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
செம்பூதி நாட்டில்  செம்பூதி,அருவங்காடு,அம்பலகாரன்பட்டி,கண்டெடுத்தான்பட்டி,தேனிமலை,கருகவேலாம்பட்டி என்ற கிராமங்களை கொண்டுள்ளது.செம்பூதி நாட்டின் பூர்விக குடிகளாகவும்,பெருண்மான்மை குடிகளாகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட முத்தரையர் மன்னர்களின் வழியினரான முத்தரையர் மக்களே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிதக்கது...



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us