|

ஆன்மீகம் மற்றும் வரலாறு

Mar 01, 2023

மேலூர் ஆதன்

"ஆதன்" என்ற பெயரை,கீழடி தயவால் நிறைய பேர்  அறிந்திருப்போம், இதற்கு முன் கொடுமணல் போன்ற அகழாய்வில் கிடைத்த பானைஓடுகளில் கிடைத்தது, தமிழி கல்வெட்டிலும் கூட உண்டு. சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் ஆதன் என்ற பெயர் பயின்று வருகின்றது. அவற்றுள் சில..

1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை

சங்ககாலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் கானங்காடு பகுதியிலுள் 7 ம் நூற்றாண்டு நடுகல் ஒன்றிலும் இப்பெயர் பயின்று வருகின்றது,இதன் வாயிலாக இப்பெயரின் தொன்மை தொடர்ச்சியை அறியமுடிகிறது.

கல்வெட்டு:

1. கோவிசைய மசீந்தி

2. ரபரும(ற்)கு பதி

3.னைந்தாவது

4. மீகொண்

5.றை நாட்ட

6. ரைசரை

7. நின்று

8. ன பூசல்

9. லில் பட்டான்

10. மேலூர் ஆதன்

மீகொன்றை நாட்டில் நடைபெற்ற பூசலில் இறக்கிறார் இந்த "மேலூர் ஆதன்"



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us