ஆன்மீகம்
Mar 03, 2023
ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை (33அடி உயரம்) அமைந்துள்ள #புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குலமங்கலம் கிராமத்தில் உள்ள வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசி மகம் திருவிழா
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் யானை சிலையும், எதிரில் அதே உயரத்தில் ஒரு குதிரை சிலையும் இருந்து பிற்காலத்தில் வில்லுனி ஆற்றில். தண்ணீர் அதிகமாக வந்ததால் அதில் யானை சிலையை அடித்து சென்று விட்டது என்றும் இந்த குதிரை சிலை மட்டும் எஞ்சியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
அதாவது கோயில் உருவாகும் முன்பு அந்த இடத்தில் காரைச்செடிகள் அடர்ந்திருந்ததால் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விளையாடும் போது அந்த இடத்தில் வைத்து ஆடு வெட்டி விருந்து வைத்து விளையாடியதாகவும், ஆடு வெட்ட அரிவாள் இல்லாததால் மண் அரிவாள் செய்து வெட்டினார்கள்.
அதில் ஆடு வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட்டதாகவும் அதனால் அந்த இடத்தில் சக்தி உள்ளது என்று கிராம மக்கள் கோயில் கட்டி விட்டனர்
இந்த கோயிலைச் சுற்றி உள்ள கிராமத்திலிருந்து மட்டும் இன்றி பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 1940 கால கட்டத்தில் குதிரை சிலை சேதம் அடைந்துள்ளதையடுத்து மறுசீரமைப்பு செய்ய முயன்ற போது அதன் வயிற்றுப் பகுதியை உடைக்க முடியாததால் அதன் மேலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்த 33 அடி உயர குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலை செய்து போடுவது தான்.
ஆண்டு தோறும் #மாசிமகம் அன்று திருவிழா நாளில் லட்சம் பக்தர்கள் கூடும் இந்த கோயிலில் குதிரைக்கு மட்டும் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காகிதப்பூ மாலைகள் போடப்படுகின்றன.
#பெருங்காரையடி_மீண்ட_ஐயனார்
#குலமங்கலம்