|

சங்கிலி கருப்பண்ணசாமி

Sep 14, 2021

???????? சங்கிலி கருப்பண்ணசாமி????????

தமிழர்களின் வழிபாட்டில் குறிப்பாக முத்தரையர் சமுதாய சிறுதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது அதில் கருப்பசாமி வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.

முத்தரையர் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் குல காவல் தெய்வமாக சங்கிலி கருப்பசாமி  வணங்கப்படுகிறார்.???? திருவானைக்காவல் இரனியம்மன் பிடாரி கோயிலில் சங்கிலி முத்தரையர் மக்களால் தான் அமைக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டு உள்ளது. பெரும்பாலான  ????

பிடாரி கோயில்களில் சங்கிலி கருப்பு காவல் தெய்வமாக உள்ளது. ???? 

???? தமிழ்நாட்டிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமான கருப்பசாமி, ஏழை எளிய மக்களுக்கு எப்போதும் காவலாக இருந்து சேவை செய்கிறார் .

???? நாட்டார் தெய்வங்களில் முனியும் ,கருப்பும் எண்ணற்ற பெயர்களையும் அமைப்புகளையும் கொண்டுள்ளனர். கருப்பசாமி வழிபாட்டில் பதினெட்டாம்படி கருப்பு, சங்கிலிக் கருப்பு வழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழர்களின் பலரது குல தெய்வமாக சங்கிலி கருப்பு சாமி விளங்குகிறார்.

இவர் தன்னை நம்பி  பக்தர்களை பேய் ,பிசாசு போன்றவற்றிடமிருந்து பாதுகாக்கிறார்.

சங்கிலிக்கருப்பு அடர்ந்த மீசையும் ,உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும் கொண்டு ,குலை நடுங்கும் தோற்றத்தை கொண்டுள்ளார். இவர் மிகவும் உக்கிரமானவர் அதனால் இவரை அடக்க சங்கிலியால்  பிணைத்து இருப்பதாக கூறுகின்றனர் .


???? இவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார் ஒருபுரம் இவர் கடவுளின் அவதாரமாக கருதப்பட்டாலும் மற்றொருபுறம்  மனிதனாக பிறந்து தன் எதிரிகளுடன் போர் புரிந்து வீரமரணம் அடைந்து, தெய்வ நிலையை  அடைந்த போர்வீரர்ளே! கருப்புகளாக உருவானதாகவும், மிகவும் உக்கிரமான அந்த கருப்புகளை சில  மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்ததாகவும் ,சில சமயம் ஊருக்கு நல்லது செய்ய மக்கள் முன்னிலையில் சத்தியம் செய்து கொண்ட கருப்புகளே!???? பின்னாளில் கருப்பு சாமியாக மக்கள் வழிபட ஆரம்பித்ததாகவும் சில தகவல்கள்    சொல்லப்படுகின்றன .????       மிகவும் உக்கிரமான தெய்வமாக கருதப்படும் சங்கிலி கருப்பனை  அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் செய்தே   அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உள்ளார்.   கிராமங்களில் தங்களது ஆசைகள் நிறைவேறாமல் துர் மரணம் அடைந்து பேய்களாக மாறிய ஆத்மாக்கள் தங்களுடைய மரணத்தை ஏற்க முடியாமல் காடு கரைகளில் ஆக்ரோஷத்துடன் அலையும் . 

???? இந்த ஆத்மாக்கள், கண்ணில்படும் மனிதர்களை காவு வாங்கும், மிகவும் ஆபத்தான  இந்த துர் ஆத்மாக்களை ,சங்கிலி கருப்பர் கட்டுக்குள்  வைக்கிறார் தன்னிடம் இருக்கும் சங்கிலியும் மூலம் அதை  சரண் அடைய வைக்கிறார்.

???? பேய் பிடித்த மனிதர்களை சங்கிலி கருப்பசாமி கோவிலுக்கு கூட்டி சென்றுபேய் ஓட்டும்  நிகழ்வு தற்போது பல கிராமங்களிலும் நடக்கிறது சங்கிலி கருப்பனுக்கு தமிழகத்தில் எண்ணற்ற கோயில்கள் இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் கீழவயல் எனும் கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலி கருப்பர் ஆலயம் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது அங்கு சங்கிலிக்கருப்பு ஆலயம் இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது அது பற்றி இப்போது பார்ப்போம்.

???? கீழவயல் கிராமத்தின் அருகே நாககலைப்பட்டினம் என்ற வளர்ச்சி பெற்ற ஊர் ஒன்று உள்ளது அந்த ஊரில் வசித்து வந்த மக்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இதனால் அவர்கள் மீது பொறாமை கொண்ட சில மந்திரவாதிகள் அந்த ஊர் மக்களுக்கு பில்லி சூனியம் செய்து மிகுந்த தொந்தரவுகளை தர ஆரம்பித்தார்கள். இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான மக்கள் அந்த கிராமத்தில் குடிகொண்டிருந்த ஒளிவிடை அய்யனாரிடம் முறையிட்டார்கள்

???? அய்யனார் மந்திரவாதிளை அழிக்க சங்கிலி கருப்பரை அனுப்பினார் .சங்கிலி கருப்பர் அங்குசென்று மந்திரவாதியுடன் ஆக்ரோசமாக சண்டையிட்டு அவர்களை கல் சிலையாக மாற்றிவிட்டார்.

???? தனக்கு கொடுத்த வேலையை முடிந்த பின் அய்யனாரிடம் வெகுமதி கேட்டார் சங்கிலி கறுப்பர்.  அதற்கு  அய்யனார் சங்கிலி கருப்பருக்கு ஒரு ஆலயம் அமைத்து ,அதில் அவருக்கு முதல் மரியாதை தருவதற்கு வழிவகை செய்து கொடுத்தார்  ஐயனார்.

???? ஆலயம் அமைக்கும் பணி நடக்கும் போது அந்த ஊரில் உள்ள பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சங்கிலி கருப்பர் நான் மழையில் நனைந்து வெயிலில் காயும் வரம் பெற்றவன்.

எனவே எனது ஆலயத்தில் மேற்கூரை அமைக்க வேண்டாம் என்று கூற அது போலவே அப்பகுதி மக்கள் அவருக்கு ஆலயத்தைக் கட்டினார்கள் நம்பியவருக்கு காவலாகவும் எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் சங்கிலி கருப்பர் பெரும்பாலும் மது, கஞ்சா மாமிசம் கொண்டே கிராமங்களில் சங்கிலி கருப்பசாமி வணங்கப்படுகிறார் எதிரி பயம் பேய் பிசாசு தொல்லை நீங்க மக்கள் இவருக்கு படையல் இட்டு வழிபட்டு வருகிறார்கள் பவுர்ணமி நிலவின் போது சங்கிலி கருப்பன் முழு சக்தியுடன் காட்சியளிப்பார். எனவே  பௌர்ணமி தினத்தன்று அவரை வணங்கி வருவது மிகவும் விசேஷமாகும் .

???????????????????? முத்தரையர் குல சாமி அன்னை நியமம் அன்னை காலா பிடாரி காவல் தெய்வமாக விளங்கும் அருள் மிகு சங்கிலி கருப்பசாமி இரண்டாண்டுகளாக தன்னை நியமம் பிடாரி திடலில் அமைக்க பணித்தார். நிதி வசதியின் காரணமாக அது நடக்காமல் இருந்தது. தற்போது நியமத்தில் கோட்டை முனியாண்டவர் அமைக்கப்பட்ட காரணத்தால் .... 

???? 20-9-2021 அன்று பவுர்ணமி தினத்தில் 63 அடி சங்கிலி நியமத்தில் அமைக்கப்பட இருக்கின்றது. சங்கிலி குல தெய்வ குடிமக்களும் ,ஆன்மீக மெய்யன்பர்களும் , நியமத்திற்கு வந்து ????முத்தரையர் குல ராஜ மாத  அன்னை மாகாளத்து காலா பிடாரி கலியுகத்திலும் மக்களுக்கு வரம் தர தெய்வம் காத்திருக்கிறது. வாருங்கள் உறவுகளே நியமத்திற்கு ????????????ஒத்துழைப்பு தாருங்கள் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளையின் வரலாற்று மீட்டுருவாக்கம் தொண்டிற்கு ???????????? தடைகள்... பொறாமைகள்.... துரோகங்கள்.... ஏமாற்றங்கள் கடந்து பேரரசர் வழிகாட்டுதலோடு.... அன்னை காலா பிடாரி ஆசியோடு .....????பணி தொடரும்.....????????????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us