|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Mar 24, 2023

தமிழகத்தின் மூத்தக்குடி,தொன்மக்குடி ,நலடியாரில் புகழப்பட்ட முத்தரையர்கள் ....!!! ,அரச மரபில் வந்த முத்தரையர் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, முத்தரையர் மன்னர்களின் அரசாட்சி,நிர்வாகதிறன், தமிழ்ப்பற்று,நீர் மேலாண்மை, போர்க்கள வெற்றிகள்,பண்பாடு ,கலாச்சாரம் , ஆன்மீக தொண்டு முதலிய பன்முகத்தன்மையில் சாதனைகள் புரிந்த முத்தரையர் வரலாற்றினை தமிழக  பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன்,முசிறி சட்ட மன்ற உறுப்பினரும்,திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்,திரு காடுவெட்டி ந.தியாகராஜன், திருவரங்கம் சட்ட மன்ற உருப்பினர் திரு.மொ.பழனியாண்டி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.  தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பட்டடுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு பெருவாரியாக வாக்களித்த உறவுகளே ......தாங்கள் அனைவரும் சேர,சோழ, பாண்டியர்களுக்கு இணையாக ஆட்சி நடத்திய முத்தரையர் வரலாற்றினை பாட திட்டத்தில் சேர்க்க கோரி போராடுங்கள் !!! கோரிக்கை மனுவினை அரசுக்கு அனுப்புங்கள் !!!சாதி அடையாளத்தோடு முத்தரையர் வரலாற்றினை பார்க்காமல் இம் மண்னின் மைந்தர்கள் ,அரச மரபினர் என்ற கண்னோட்டத்தோடு எம் மன்னர்கள் வரலாற்றினை பதிவு செய்யுங்கள்.....!!! அடையாளப்படுத்துங்கள்..... தமிழக அரசே  !!! அனைவருக்கும் நன்றி !!!!திருநியமம் அன்னை காளா பிடாரி மற்றும் பேரரசர் திருப்பாதம் போற்றி !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us