செய்திக் கதம்பம்
Apr 08, 2023
மேட்டூர் அணை வரலாறும்...
எதிர்காலத்துக்கான தொல்லியல் பார்வையும் ....
எழுத்து --- தமிழன் வீரமணி
மேட்டூர் அணைக்கட்டு வரலாற்றில்
🙏🙏🙏🙏🙏🙏🙏
• இன்று மக்களுக்குத் தெரிந்த விசயம் காவிரி மேலாண்மை வாரியம் ஆகும் ; சங்க காலம் தொட்டே காவிரி தமிழகத்தில் பாயும் நதி .. அதை பற்றிய புரிதல் பலருக்கு இல்லை .
• காவிரி பாயும் வழியில்தான் தமிழகத்தின் மேட்டூர் அணை உள்ளது. இந்த அணை 1934 -ல் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது .
• முன்பு இந்த பகுதிகள் யாவும் [தருமபுரி தொடங்கி தஞ்சை வரை] சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது . பிறகு பல்வேறு மன்னர்களின் படையெடுப்பால் நிலை மாறியது... இன்னல்கள் சொல்லி மாளாது.
மதுரை சுல்தான் ஆட்சி (1323-1370)
விஜயநகர நேரடி ஆட்சி(1370-1529)
நாயக்கர்கள் ஆட்சி(1529-1697)
17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி
மொகலாயர் ஆட்சி (1697-1801)
ஆங்கிலேயர்கள் ஆட்சி (1801-1947 )
• 1801 பின் பல மாறுதல்கள் ஏற்பட்டது. காவிரி ஆற்றின் இரு கரையின் மக்கள் வேளாண்மை & மீன் பிடி தொழில் மூலம் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்...
• ஆங்கிலேய ஆட்சியில் 1824 - ம் ஆண்டில் இருந்து இந்த அணையை கட்ட தீர்மானம் போடப்பட்டிருந்தது. அத்திட்டம் கைகூடவில்லை ; தொடர்ந்து ஆங்கில அதிகாரிகள் அணைக்கான ஒப்புதல் பெற முயற்சி செய்தனர். அதன்படி மேட்டூரில் 1924-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்த சுடேன்லி (stanly) என்ற பொறியாளர் மூலம் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
• 1700 மீ. நீளமும், 171 அடி அகலம் கொண்ட 9347 கோடி கன அளவு நீர் தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கான நீர் வரத்து கர்நாடக மாநில கபினி அணை & கிருசண ராச சாகர அணையில் பெறப்படுகிறது. இந்த அணையின் தண்ணீர் சேலம் , நாமக்கல் உள்பட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறவும் .. குடிநீர் தேவைக்காகவும் திறக்கப்படுகிறது.
• மேட்டூர் அணை கட்டும் பணியில் 9 ஆண்டு காலம் 10 000 மேற்பட்ட பணியாளர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணை நீர்த் தேக்க பகுதிகளில் சேத்துக்குளி , சாம்பள்ளி , கோட்டையூர், பண்ணவாடி , சோழப்பாடி , காவேரிபுரம் , நேயம்பாடி , தாளவாடி , மல்லப்பாடி, நாகமலை , கோட்டை துறை , புதுவேலமங்கலம் , செட்டிபட்டி , கீரைக்காரனூர் உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. (33 கிராமம் என சிலர் கூறுவது ஆய்விற்கு உரியது)
• இந்த கிராமங்களில் வசித்த மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்கியதால் தங்களது வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
• மற்ற மாவட்ட மக்களும் நலம் பெற வேண்டும் என தங்களின் பூர்வீகத்தை விட்டு கையில் கிடைத்த தானியங்களையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெவ்வேறு இடங்களில் குடியேறினர்.
• பல தலைமுறைகள் வாழ்ந்த இடத்தை விட்டு தம் குடும்பத்தை கூட்டி வேறு இடங்களில் வாழும் மக்களின் மனநிலை ஈழத்தமிழ் மக்களின் நிலையே ..
• இன்றும் அங்கு கிறித்துவ ஆலயம், சலகண்டேஸ்வரர் ஆலய கோபுரம் , நந்தி சிலையும் இருக்கின்றன, மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீரை தேக்க முடியும். பண்ணவாடியில் அணை நீர்மட்டம் 79 அடியாக குறையும்போது 2 கிறித்துவ ஆலய கோபுரம் தெரியும். அதில் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டு விட்டது என கூறப்படுவது வேதனைக்கு உரியது ; நீர் மட்டம் 69 அடி குறையும் போது நந்தி சிலை வெளியே தெரியும் . நீர்மட்டம் 44 அடிக்கு குறையும் போது கீரைக்காரனூர் பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவில் கோபுரமும் வெளியில் தெரியும் .
🙏🙏🙏🙏🙏
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🤝🤝🤝