|

அன்னை காளா பிடாரி போற்றி

Apr 19, 2023

முத்தரையர்கள் சமய நல்லிணக்கத்தோடு அறத்தின் வழியில் ஆட்சி நடத்திய காரணத்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களாக ,தொன்மக்குடி வரலாற்று அடையாளத்தோடு...  வாழ்ந்து வருகிறார்கள். முத்தரையர்கள் சைவத்துக்கும்,சமணத்துக்கும், வைணவத்துக்கும்,புத்தத்துக்கும் தொண்டு செய்த தெய்வீக குடியினர் முத்தரையர் குடி ! 1500 ஆண்டுகளுக்கு முன் முத்தரையர் மன்னர்கள் நியமத்தில் கோட்டை கட்டி ஆண்டவர்கள். பேரரசர் சுவரன்மாறன் அன்னை காளா பிடாரி ,ஆயிரத்தளி காளா பிடாரனேஷ்வரர் ஆலயம் அமைத்து வணங்கியவர். இளங்கோவதிரையன் என்ற முத்தரையர் மன்னர் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு தொண்டு செய்த புண்னியவான். அவர் வணங்கிய உலகளந்த பெருமாள் சிலை இன்றும் நியமத்தில் பக்தர்களுக்கு அருளாசியும்,முத்தரையர் மன்னர்கள் வைணவத்திற்கு தொண்டு செய்த அடையாளத்தோடும் சாட்சியாகவும் இன்றும் வயல் வெளியில் காட்சி தருகிறார். தமிழக அரசு கோயில் நிலங்களை மீட்டெடுக்குமா ... ? தொல்லியல் துறை அகழாய்வு நடத்துமா.... !!! இல்லை முத்தரையர் வரலாற்று அடையாளங்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று அலட்சியம் காட்டுமா.... !!!? ஆன்மீக மெய்யன்பர்கள் குரல் கொடுப்பாளர்களா ! ? ஊடகம் இவற்றையெல்லாம் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லுமா... ? பேரரசர் இரத்த உறவுகள் வரலாற்றை அடையாளப்படுத்த முன் வருவார்களா.... ??? ஓம் நமோ நாராயணாய... !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us