விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கApr 24, 2023
23-04-2023 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் நாளந்தா கலையரங்கில் முத்தரையர் குல மீனவர்கள்( டிவாரா சம்ரக்னா சமிதி ) அமைப்பின் சார்பாக மீனவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முத்தரையர் வரலாற்று நூல்கள் வெளியிடப்பட்டது. கேரள மாநில அரசின் மாண்புமிகு அமைச்சர் அஹமத் தேவர் கோவில் அவர்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர் கோமகன் எழுதிய "The Glory Of Mutharayar Dynasty" , எனும் நூலும் பேராசிரியர் சந்திரசேகரன் எழுதிய மெய்க்கீர்த்தி எனும் நூலும் கல்வெட்டு ஆய்வாளர் சுபாஸ்சந்திரபோஸ் மற்றும் பேராசிரியர் சந்திரசேகரன் இனைந்து எழுதிய முத்தரையர் கல்வெட்டுகள் எனும் நூலும் தேவதாஸ் அவர்கள் எழுதிய மலையாள மொழியில் "முத்தரையர் வம்சம்" ஆகிய நூல்களும் உலக புத்தக தின விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினை கேரள மாநில மீனவர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.தேவதாஸ்,திரு.சுதிர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் ஆந்திர மாநில மீனவர் அமைப்பின் நிர்வாகி போலையா , திருச்சி பத்மஸ்ரீ தாமோதரன்,முத்தரையர் சாம்ராஜ்ஜியம் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.