அன்னை காளா பிடாரி போற்றி
May 08, 2023
முத்தரையர்
முத்தரையர் குல தெய்வம்
🔥🔥🔥🔥🔥🔥🔥
போர்க்கள குருதி வெள்ளத்தில், தந்தையின் வியர்வை வாசத்தில், வெற்றியோடு வீர கர்வமும் மேலோங்க, கம்பீரத்தோடு தன் மனையாளை இறுக அணைத்தான் ஒரு போர்வீரன்...
🔥
கணவனின் வீர தீர பராக்கிரமங்களை கண்டு மெய்சிலிர்த்தாள் பாவை பெண்ணொருத்தி, உன் உடலும் சிலிர்த்தது, அப்போது நீ கருவில் இருந்தாய்...
🔥
கருவிலேயே போர்க்குணம்
கொண்ட நீதான் ஏனோ இப்போதெல்லாம் அடிமை
வாழ்வையே அதிகம் விரும்புறாய்...
🔥
காரணம் தேடினேன்..
🔥
இதோ கிடைத்துவிட்டது.....
🔥
ஆம் முத்தரையா, நம் பாட்டன் வழிபட்ட போர் தெய்வமான, வெற்றியே நாளும் அருளும் கொற்றவை பிடாரி அன்னை.....!
🔥
பேரினமாய் தன் குழந்தைகள் பாரெங்கும் பரவி வாழ்ந்தாலும்,
🔥
அனாதை இல்லத்தில் விடப்பட்ட நாதியற்றவள் போல, தனிமையில் கேட்பாரற்று கிடக்கிறாளே.உன் குலம் காத்த உத்தமி, உன் மனமென்ன கல்லா..??
🔥
உன் அடிமை குணத்திற்கு காரணம், அவள் உன்மீது பார்வையற்று இருப்பதனால் தான் என்பதை அறிந்திடாமல் போய்விட்டோமே...
🔥
எத்தனை நூறாண்டுகள் சிற்றரசர்களாகவும், பலம் பொருந்திய பேரரசர்களாகவும் முடிசூடி நாடாண்டோம், ஆனால் இன்று நூறு ரூபாய் கொடுத்தால் கொலையும் செய்யும் கொடூரர்களாக, அடுத்தவேளை சோற்றுக்கு அல்லாடும் பரதேசிகளாக, கட்டளையிட்டால் பணிந்து நடக்கும் கைப்பாவையாக செயல்படும் நிலை நமக்கா.,......? வர வேண்டும்...
🔥
இன்றே சபதமேற்போம் முத்தரையர்களே.....
🤝
அன்னைக்கோர் ஆலயம் செய்வோம், அய்யனுக்கோர் ஆலயம் செய்வோம்,
🔥
மன்னர் வம்சம் ஆலயம் அமைப்பதென்றால் செங்கள் கட்டுமான கோவிலா..?? இல்லவே இல்லை நிச்சயமாக கற்றளி கோவில் தான் அமைப்போம்...
🔥
சமுதாய தலைவர்கள் பெருமளவில் நிதி தருவதாக சொல்கிறார்கள், நாமோ இன்னும் சங்க சண்டைகளிலேயே முழு கவனம் செலுத்துகிறோம் பச்சிளம் குழந்தைகள் போலவே...
🔥
சமதமேற்போம் இந்த 2021 ம் நூற்றாண்டிலேயே ஆலயம் அமைப்போம், வெற்றிக் கடவுளான கொற்றவை பிடாரியவள் நம்மை நிச்சயம் உயர்த்தி காட்டுவாள்...
🔥
ஒன்றுபடுவோம்.... ! ஆலயம் அமைப்போம் !!!
🔥
குல தெய்வ பணியிலாவது ஒன்று படுவீர்களா. .....!!!
🔥
ஊக்கத்துடன் .............ஏக்கத்துடனும்...... திரு நியமத்தில் அன்னை காளா பிடாரி ......!!!
🔥
உம் வருகைக்காக......???
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝