|

ஆன்மீகம்

May 09, 2023

இன்று சோழப் பேரரசி #பெரியபிராட்டி #செம்பியன்_மாதேவியார் பிறந்த தினம்..!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மண்டலத்தை ஆண்ட நான்கு அரசர்களை உருவாக்கியவர் பேரரசியார் #செம்பியன்_மாதேவி. செம்பியன் மாதேவி #சித்திரை மாதம் #கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர். தமிழர்களின் வீரம் மற்றும் இறைபக்தியின் அடையாளமாய் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவி. 13 வயதில் #கண்டராதித்ய சோழரை மணந்து, #மதுராந்தக சோழரை பிரசவித்தவர், தனது 15 வது வயதில் கண்டராதித்ய சோழர் மறைந்ததால் #சிவஞானியானார்.

கண்டராதித்ய சோழருக்கு பின்னர் #அருஞ்சிய_சோழரையும், அவருக்கு பின்னர் அவரது மகன் #சுந்தர_சோழரையும், அரியணை ஏற்றி வைத்தவர். அரசியல் நெருக்கடிகளை சாமர்த்தியமாகக் கையாண்டவர். அவருக்கு பின்னர் ராஜமாதாவாக இருந்து, #உத்தமசோழர் என்று அழைக்கப்பட்ட தனது மகன் மதுராந்தக சோழரை மன்னராக்கியவர் செம்பியன் மாதேவி.

கணவர் மறைவுக்கு பின்னர் முற்றிலும் சிவஞானியான செம்பியன் மாதேவி, மண்ணாலும் சுடுகல்லாலும் கட்டிச் சிதைந்துபோன #சிவாலயங்களைப் புதிதாக நிர்மாணித்தார். பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்து, கருங்கற்களைக் கொண்டு வந்து ஏராளமான சிற்பிகளைக் கொண்டு பிரசித்தி பெற்ற 10 சிவாலயங்களை நிர்மாணித்து சிவத்தொண்டாற்றினார்.

கும்பகோணம் அருகே உள்ள கோணேரி ராசபுரத்தில் #கண்டராதித்தேஸ்வரம் என்ற பெயரில் சிவாலயத்தை நிறுவி உலகிலேயே பெரிய அளவில் தொன்மையான ஐம்பொன் #நடராஜர் சிலையை நிறுவினார் செம்பியன் மாதேவி. அதே கோவிலில் ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலையை அவரது மகனும் பட்டத்தரசருமான உத்தமச் சோழர் நிறுவினார்.

அவருக்கு பின்னர் பேரன் #ராசராசசோழனை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து 1001 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார் செம்பியன்மாதேவி. இவரது சமாதி இன்று #சேவூரில் (செம்பியன் கிழானடி நல்லூர்) அமைந்துள்ளது. 1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, #பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள #கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை மன்னர் முதலாம் #ராஜேந்திர_சோழர் அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது.

தன்னிகரற்ற மாதரசியாம் செம்பியன்மாதேவியாரின் அருப்பெரும் பணிகளை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வோம்..!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us