பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கMay 22, 2023
23-05-2023 அன்று தமிழக அரசு பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1348 ஆவது பிறந்த நாள் விழாவினை அரசு விழாவாக கொண்டாடுகிறது. தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்டவர், 16 க்கும் மேற்பட்ட போர்களில் வெற்றி மட்டுமே கண்டவர்,போருக்கு செல்லும் போதே வாகைப் பூ சூடிய வேந்தர். தமிழக மன்னர்களில் தலை சிறந்தவறான பேரரசர் சுவரன் மாறன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்க்காலமாகும்.இவரது ஆட்சிக்காலம் கி.பி.705 முதல் கி.பி 745 வரை. திரு நியமம் அன்னை காளா பிடாரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமத்தில் 1008 லிங்கங்களை அமைத்து வணங்கிய பேரரசர்தான் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் ,ஆதலால் தான் ஆண்டு தோறும் தமிழக அரசு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கும்,பெண்களுக்கும் நோட்டு புத்தகங்கள்,பென்சில்,புத்தக பை,சேலைகள் ஆகியன திருச்சி,ஒத்தக்கடை, முத்தரையர் சதுக்கத்தில் அமைந்து இருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் சிலையின் முன்பாக அனைவருக்கும் மேற்கண்ட் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருச்சி சூ மார்ட் உரிமையாளர் பெருமாள்,மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இதற்க்கான ஏற்பாடுகளை முத்தரையர் இலக்கிய வட்ட அமைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.