சுவடழிந்த கோயில்
Sep 24, 2021
+3
பெரிய சிவன் கோயில் இருந்த இடம் மண்மேடாய் காட்சியளிக்கிறது.
சீமைக்கருவேலம் புதருக்குள் சோழர் கால மூத்ததேவியின் திருவுருவம் மண்ணில் புதைந்து கிடக்கிறது.
லிங்கப் பகுதி இல்லாத ஆவுடையார் மண்ணில் புதையுண்டு கிடக்கிறார்.
பெருங்கற்காலக் குத்துக்கல் எனும் நெடுங்கல் ஒன்று வீழ்ந்து கிடக்க, மற்றொன்று நின்று கொண்டிருக்கிறது.
பழங்கால லிங்கத்தை நினைவூட்டும் லிங்கக்கல் ஒன்று உள்ளது. அதன் தலைப்பகுதி ஆண்குறி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கந்து நட்டு வழிபட்ட மரபின் அடையாளமாக இது கருதும்படி உள்ளது.
கந்து நட்டு வழிபட்ட இடத்தில் உருவான ஊர் கந்துப்பட்டி என அழைக்கப்பட்டு இப்போது காந்துப்பட்டியாக மாறியுள்ளதென கருதவேண்டியுள்ளது.
ஊரின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்காக இருந்த பெருங்கற்காலப் புதைப்பிடங்கள் - ஈமச்சின்னங்கள் தைலமரப் வளர்ப்பாலும் மண்கொள்ளையாலும் அழிக்கப்பட்டு விட்டன.
அழிந்து புதைந்துகிடக்கும் சிவன் கோயில் மண்மேட்டை அகழாய்வு செய்தால் புதிய வரலாறு வெளிப்படும்.
காந்துப்பட்டி,
புல்வயல் - வலோகம் அருகில்
புதுக்கோட்டை Dt????????????????????