ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 15, 2023
மறவ வலையர்
தமிழ்நாட்டில் வசிக்கும் வலையர் சமுதாயத்தின் ஓர் உட்பிரிவாக மறவ வலையர் என்ற ஓர் பிரிவினர் இருந்துள்ளதாக 1881-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசால் எழுதப்பட்ட Report of the Census of British India 1881 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர 1996-ஆம் ஆண்டு K. S. Singh என்ற மானுடவியல் ஆராய்ச்சியாளரால் எழுதப்பட்ட Communities, Segments, Synonyms, Surnames and Titles என்ற நூலிலும் இந்த மறவ வலையர் பிரிவினரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று தகவல் என்னவென்றால் மறவ வலையர் என்ற ஓர் வலையர் சமுதாய உட்பிரிவினர்கள் இருந்துள்ள தகவல் இதன் மூலம் நமக்கு தெரிய வருகின்றது ஆனால் அந்த பிரிவினர் தமிழகத்தில் தற்போது எந்தப் பகுதியில் வசிக்கின்றனர் என்ற தகவல் நம்மிடத்தில் இல்லை மற்றும் இந்த மறவ வலையர் பிரிவினர்கள் பற்றி ஆராய்ந்து பார்த்தோம் என்றால் இந்த பிரிவினர்கள் முன்பு காலங்களில் போர் படை வீரர்களாக இருந்திருக்கலாம் (சொல் அகராதி மறவன் என்றால் போர் வீரன் என்று அர்த்தம் குறிப்பிடுகின்றது) அதன் காரணமாக இப்பிரிவினருக்கு மறவ வலையர் என்ற பெயர் வந்திருக்க வாய்ப்புள்ளது.
(குறிப்பு : மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மறவங்குளம் என்ற கிராமத்தில் முழுக்க முழுக்க நமது வலையர் சமுதாய மக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.)