|

மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Oct 11, 2021

அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக நியமத்தில் அன்னை காளா பிடாரி கோயில் கட்டப்பட்டு வருகிறது. அக்கோயிலின் கட்டுமான பணிக்கு துணை நிற்கும் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை  அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், துணை செயலாளர் சங்கரன் தங்கதுரை ,ஆடிட்டர் விநாயகமூர்த்தி , திருச்சி தேசியக்கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துகொண்டனர்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் கிராமத்தில் அருள் பாலிக்கும் அன்னை காளா பிடாரி கோயில் ஸ்டிக்கரை மாண்புமிகு அமைச்சர் வெளியிட அதனை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை , செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us