ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 24, 2023
முத்தரையர் சமுதாயமும் அரசியலும் - 3
கடந்த இரு பதிவுகளிலும் முத்தரையர் சமுதாயத்தினரின் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் நமக்கு கிடைக்க பட வேண்டிய சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை பற்றியும் தவிர முத்தரையர் சமுதாயத்தினரால் மிக எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் பார்த்திருந்தோம். இந்த பதிவில் முத்தரையர் சமுதாயத்தினரால் இதுவரை வெற்றி பெறப்பட்டுள்ள தொகுதிகள் பற்றி நாம் விரிவாக காண்போம்.
♦️முத்தரையர் சமுதாயத்தினரால்
இதுவரை வெற்றி பெறப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளின் பெயர்கள்♦️
1, ஸ்ரீரங்கம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
2, முசிறி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
3, மணச்சநல்லூர் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
4, லால்குடி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
5, மருங்காபுரி இன்றைய மணப்பாறை தொகுதி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6, உப்பிலியாபுரம் இன்றைய துறையூர் தொகுதி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
7, திருச்சி மேற்கு (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
8, ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)
9, திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்)
10, அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்)
11, குளித்தலை (கரூர் மாவட்டம்)
12, பேராவூரணி (தஞ்சாவூர் மாவட்டம்)
13, நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்)
14, மேலூர் (மதுரை மாவட்டம்)
15, திருவொற்றியூர் (திருவள்ளூர் மாவட்டம்)
மேற்குறிப்பிட்ட 15 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த காலங்களின் நமது முத்தரையர் சமுதாயத்தினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒரு சில சட்டமன்ற தொகுதிகளில் தற்போதும் நமது முத்தரையர் சமுதாயத்தினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பு : இந்த பட்டியலில் தொட்டியம் சட்டமன்ற தொகுதியை நான் இணைக்கவில்லை காரணம் முந்தைய தொட்டியம் சட்டமன்ற தொகுதியின் பெரும் பகுதி தற்போதைய முசிறி சட்டமன்ற தொகுதிக்குள் இணைக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக தான் நான் தொட்டியம் சட்டமன்ற தொகுதியை இணைக்கவில்லை.
இவன் : மதுரை A.K.மகேஷ் முத்தரையர்