|

ஆன்மீகம்

Jun 28, 2023

#ராகு கேது 

#ஜோதிட பதிவு.

👉ராகுவின் செயல்களில் கேதுவும் கேதுவின் செயல்களில் ராகுவும் மறைமுகமாக தூண்டப்படுகிறது

👉ராகுவும் கேதுவும் 180* நேர் எதிர் திசையில் பயணிக்க கூடியவை.

👉ராகு தசையில் கேதுவின் வெளிப்பாடும்,  கேது தசை புக்தி காலத்தில் ராகுவின் வெளிப்பாடும் நிச்சயம் இருக்கும் ..#kirthika#

👉ராகு கேது உடன் நெருங்கும் கிரகங்கள் தன்னுடைய வலிமையை இழக்கும்

👉ராகுவுடன் இணைந்த கிரகம் பெரிதாக காட்டப்படும் என்று சொன்னாலும் இறுதியில் ஒன்றும் இல்லாமல் செய்யக்கூடியதும் ராகுவே..

👉கேதுடன் இணைந்த கிரகம் தன்னை சுருக்கிக் கொள்ளும் எனன் சொன்னாலும்,  கேது உடன் இணைந்த கிரகத்துடன் நிபுணத்துவத்தை கொடுப்பது (ஆராய்ச்சி நிலையை கொடுப்பது) ராகுவும் கேதுவும் ..

👉ராகு தசையில் / புக்தி காலங்களில்,  அதீத ஆசை மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை,  ஆகியவை தூண்டப்பட்டு முடிவில் ஒன்றும் இல்லாமல் செய்வது கேதுவாகும்.#kirthika#

👉கேது தசையில், ராகுவினால் சில விஷயங்கள் தூண்டப்பட்டு,  அவற்றில் ஆராய்ச்சி பண்ணுவது,  அல்லது அழ வைத்து விரக்தியை கொடுத்து பார்ப்பது கேதுவின் வேலை, ,

👉கேதுவினால் ஒருவருடைய ஞானத்தை வெளிப்படுத்துவதால் தான் அங்கே அறிவை வளர்க்கக்கூடிய திறனை அல்லது ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவது கேது என சொல்லலாம், ,#kirthika#

👉கேது தசை என சொன்னவுடன் கேதுவினால் சுருக்கிக்கொள்ள முடியும் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது ஒரு விஷயத்தை பெரிது படுத்தவும் கேதுவால் செய்ய முடியும் (ஒரு பாவகத்தை வளர்ச்சியும் சுருக்கவும் செய்ய கூடிய தன்மை கொண்டது கேது )

👉பொதுவாக ராகுவும் கேதுவும் எந்த கிரகத்துடன் இணையாமல் தனித்திருந்து தசா புக்தி நடத்தும் பொழுது கர்ம வினையின் மட்டுமே செயல்படும் ஆனால் மற்ற கிரகங்களுடன் சேரும்பொழுது ,இணைந்த கிரகத்தின் காரகத்துவ ஆதிபத்திய பலனை சேர்த்து செய்யும் ..#kirthika#

👉அனைத்தையும் கொடுத்து அனைத்தையும் மாற்றும்

👉கேதுவினால் ராகுவும் ராகுவினால் கேதுவும் ஒன்றுக்கொன்று உள்ளிளித்துக் கொண்டு முடிவிளித்தன்மையை சொல்வதே ராகு கேதுவின் நோக்கம் ..(infinity stage)

👉ராகு கேதுவின் தன்மையை அலசி ஆராய்வதே எட்டாம் பாவகம் என்னும் மறைபொருள் ஆற்றல் / எட்டாம் பாவகத்துடனே சனியின் தொடர்பு.#kirthika#

👉ஆகையினால் தான் ராகு கேது மற்றும் சனி போன்றவை கர்ம கிரகங்களாக கர்மவினை எதிர்கொள்ளும் /வழி நடத்தும் தன்மையை கொண்டுள்ளன..

👉கேது லக்ன சுபர்களின் தொடர்பை பெறும் பொழுது மிகப்பெரிய விஸ்வரூபம் பொருளாதாரம் முன்னேற்றத்தை கொடுக்கிறது பல ஜாதகங்களில்,  ஆனாலும் இறுதியில் அனுபவிக்க முடியாத அல்லது / வெறுப்புத் தன்மையை தூண்டக்கூடிய வகையை செய்து விடுகிறது ராகு ..

இப்படி ஒன்றுக்கொன்று ராகுவும் கேதுவும் மறைமுகமாக,  தொடர்பு பெற்று முடிவிளியாக நிற்பதே அவரவரின் கர்ம தொடர்பாகும் ..
ஓம் நமச்சிவாய !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us