ஆன்மீகம்
Jul 06, 2023
வெண்குதிரை மீதேறி
வானுலவும் கருப்பழகா
குடும்பத்துடன் விளையாட
குதித்தாடி வாராயோ
🔥
அழகர்மலை தோட்டத்திலே அழகுமயில் தோகையாட
கருப்பசாமி வருகையிலே
*கைதொழுதோர் ஆயிரமாம்
🔥
வற்றாத பக்தியினால்
*வல்வினையும் மாயமடி வந்தவழி போகுதடி
வேட்டைக்காரன் வருகையிலே
🔥
தடிதனை கையேந்தி
தமிழ்முனியாய் வருகையிலே
தள்ளாத கிழவருமே
துள்ளியே ஆடுதடி
🔥
தந்திமுகன் தயவாலே தங்கமுகம் கருப்பழகா
கண்ணிரண்டும் உன்னழகை *கடுகிவந்து பாடுகையில்
🔥
*கனவினிலும் உன்முகமே கண்டுமனம் துள்ளுதடா
கற்பனையில் உன்னுருவே
கவிதையிலே ஆடுதடா
🔥
கற்பகமாய் நின்னருளே
கற்பூரமாய் ஒளிருதடா
கடம்பவனக் காவலனே
கண்திறவாய் கருணையுடன்
🔥🔥💪🔥🔥
ஆன்மீக தொண்டில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com🙏🙏💪🙏