சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்! பழநிமலை !
Oct 23, 2021
சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்! பழநிமலை !
அனேக அதிசயங்களை கொண்டது பழநிமலை இதன் அடிவாரத்தில் அதில் வடக்குகிரிவீதியில் உள்ளது, பலநுாறு ஆண்டுகளுக்குமுன் சித்தர்கள் போகர், புலிப்பாணி வணங்கிய தொட்டிச்சியம்மன் கோயில்.
தொட்டிச்சி அம்மனை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதனால் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகின்றனர்.
புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த பாத்திர சுவாமிகள் கூறியதாவது:
இவ்வுலகின் காவல்தெய்வமாக தொட்டிச்சியம்மன் வணங்கப்படுகிறார்.
பழநி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டது.
மலைக்கோயில் மூலவர் ஞான தண்டாயுதபாணி அம்மனின் முகங்கள் ஒரேமாதிரி இருப்பது சிறப்பு.
நவராத்திரிவிழா, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், பன்னீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் அர்ச்சனை செய்து அம்மன் அருள்பெறுகின்றனர், என்றார்.
அம்மனுக்கு புலிபாணி
ஆசிரமத்தின் சந்நிதி உள்ளது.????????????