மனு நீதீச்சோழன்
09 Jan, 2025
தொடர்ந்து படிக்கAug 16, 2023
மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்... இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே.. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்*.. அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.. இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்... ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரை களையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ??? போர் புரிவதற்காக மட்டும்தான் !!! யானைப்படை மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000... 1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்.. அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...