ஆளப்பிறந்த முத்தரையர்களே
Aug 21, 2023
முத்தரசு சென்னப்பா
----------------------------------------
https://marimuthuampalam.blogspot.com/2020/07/blog-post_9.html
முத்தரையர்கள் தமிழகத்தின் தென் பகுதிகளில் வலையர் என்ற
பெயரில் உள்ளனர். இவர்களுக்கு சற்று வடக்கில் உள்ள மாவட்டங்களில் அம்லகாரர் என்றபெயரும் உள்ளது. இவர்கள் பலமாவட்டங்களளி் பாராந்து விரிந்து வாழ்கின்றனர். அம்பலகாரர்கள், முத்திரியன், முத்தராச்சா
ள். வேட்டுவன் மற்றும் ஊராளிகள் என்ற பெயரிலும் வாழ்க்ன்றனர்
மத்துராச்சா - தெலுங்கு பேசுகிறவர்கள் ஆந்திராவிலும், ராயலு
சீமையிலும் பரவி வாழ்கின்றனர். இவர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா
மாநிலங்களிலும் வாழுகின்றனர். ஆம் தி வலையர் சொசைட்டி மற்றும்
ரிலீஜன் பக்:49. ஆர் தி டெசிங்கு செட்டி.
இவர்கள் தெலுங்கு (ஆந்திரர்) மாநிலத்தில், முத்துராஜா, முத்திராஜசலு
முத்தரசன் மற்றும் முத்துராச்சா என்றும், பாளையக்காரன் என்ற
பெயரிலும் வாழுகின்றனர். இவர்கள் தெலுங்கு நாட்டில் கிருஷ்ணா
நெல்லூர், கடப்பா, மற்றும் தமிழகத்தின் வடகோடி ஆர்காடு பகுதிகளிலும்
முத்துராஜாக்கள் விஜயநகர மன்னர்களிடம் பணியாற்றினர். இவர்கள்
பாளையக்காரர் என்ற பட்டத்துடனும், தோராநாயுடு என்றும் பெயர்
பெற்றிருந்தனர்
இவர்கள் தங்களை தலையாரி என்றும்
அழைத்துக்கொண்டனர். இவர்கள் வசித்த பகுதி பாளையங்களில்
இவர்கள் பணியாற்றினர். இவர்களை விஜயநகர மன்னர்கள்
காவலர்களாகத் தனது எல்லைக்குள் நியமித்துக் கொண்டனர். ஆம்
நூல்.தி.வலையர் சொசைட்டி மற்றும் ரிலீஜன் பக்:66, ஆர்.இ.டெசிங்குசெட்டி.
விஜயநகர
தலையாரிகளாகவும், பணியாற்றியவர்கள் பாளையப்பட்டுக்களில்
தலைவர்களாகவும் பொறுப்பேற்று அரசை நடத்தினர். பொறுப்பு ஏற்ற
இவர்கள், தங்கள் சாதியையும், பாளையக்காரர், காவலர்காரர்
தலையாரி, நாயக்கர், நாயடு என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்கள்
போர் வீரர்களாக விளங்கினர். படைகளை நடத்தும் வல்லமையும்
படைத்திருந்தனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த போது இவர்களின்
பொதுவான ஜாதி வலையன் என்றானது. இவர்களின் கிளை சாதிகளாக
அம்பலகாரன், முத்துராசா. முத்திரியன். சேர்வை, வேடன், வல்லம்பன், மற்றும் பலியர் எனப்பட்டனர்.இவர்கள் வரலாற்றுத் தொடரில், தொழில் சமுதாயம் நிலை, கடவுள் வணங்கும் நிலை, மதம் திருமணம் போன்ற நிலைகளை கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
((குறிப்பு: விஜயநகர மன்னர்கள் முத்தரையர் என்று ஒரு வரலாற்றுச் செய்தியை திரு.ரங்கசாமி B.E., (முதன்மை பொறியாளர்) ஆந்திராவிலிருந்து வெளியிட்டுள்ளார்.))
இத்தகைய சூழ்நிலையில் விசயநகரப் பேரரசின் பாளையங்களை ஆட்சி செய்தவர்களில் ஒருவரே "முத்தரசு சென்னப்பா" என்ற பாளையப்பட்டு தலைவர் ஆவார். இவர் இன்று கடற்கரை ஓரமாக சென்னை அமைந்துள்ள பகுதியை ஆண்டு வந்தார் இவர் இப்பகுதி மீனவர்களின் தலைவராகவும் இருந்தவர். இவரின் இயற்பெயர் அல்லது முத்தரசு சென்னப்பா என்பதாகும். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கிபி 1600ல் கிரயம் பெற்றனர் கிரயம் பெற்ற இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினர் இந்த கோட்டையிலேயே தான் இன்றைய தமிழக அரசு அலுவலகங்களும் உள்ளன இந்த இடம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இவ்வாறு கட்டப்பட்ட கோட்டையை சுற்றிலும் வீடுகளும் குடியிருப்புகளும் உருவாகிற்று இந்த இடத்திற்கு பெயர் சொல்லி அழைக்க ஆங்கிலேயர் முகவரியாக இடம் விட்டுக்கொடுத்த மீனவர் தலைவர் பெயரை, திரு "சென்னை பட்டணம்" என்றும் முட்ராஸ் மெட்ராஸ் என்றும் பெயரிட்டு அழைத்தனர் இன்றைய சென்னை மாநகரம் வலையர் சாதியைச் சேர்ந்த முத்தரசு சின்னப்பா என்பவரின் பெயரிலேயே பட்டணம், நகரத்தை (சென்னை பட்டணம்) என்று அழைத்தனர்.
இந்த வலையர் சாதியைச் சேர்ந்தவர்கள் கீழ்க்கண்டவாறு பெயர்களில் இன்றும் வாழ்கின்றனர் அம்பலம் அம்பலக்காரர் என்ற பெயரில் மதுரை மாவட்டம் கொடைரோடு பகுதியிலும் மூப்பர் அல்லது மூப்பனார் என்று மதுரையின் பின்பகுதி ராமநாதபுரம் மாவட்டங்களில் சேர்வை என்ற பெயரில் மதுரை மாவட்டத்திலும் மூக்கு அல்லது மூப்பனார் என்றும் அழகர்கோவில் பகுதிகளில் சரக்கு உடையார் என்றும் புதுக்கோட்டை பகுதியிலுள்ள வலையர் தற்போது அம்பலகரர் சேர்வை என்றும் ஆங்கிலேயர் எடுத்த 1931 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்குகள் மூலம் தெரிகின்றன.
இவ்வாறு முத்தரசு சின்னப்பா தனது பகுதிகளில் செல்வாக்குடன் ஆட்சி செய்தார் இவரின் பாளையப்பட்டைப் போல உய்யாளூர் பாளையப்பட்டையும், அவர்களின் செயல்களைப் பாராட்டி 32 விருதுகளும், குதிரை, துவம்சம், பல்லக்கு, யானை, பொன்தடி, வெள்ளித்தடி, கனக தண்டிகை, ஓட்டை, முரசு சின்னம், சூரிய பரணம், தம்பட்டை கொடி, தபிலாதுத்தி,வண்டயம், மல்லாரி, ஆலவட்டம், தீரதிமுகம், பரளிமுகம், மிருதங்கம், வங்கா, நதகதப்பு, பேரிகை, அஸ்தமனகிரி, கூந்தல், நகார், நாகபத்து, பங்கா, டோல், புலித்தோல், கள்ளம், சமரம், மாணிக்கம், கிரீடம், முதலியவைகளையும் வழங்கி கீழச்சேரி, நெடுமாப் ரெட்டூர், தலக்காண் குப்பம் முதலிய கிராமங்களையும் கொடுத்தும், செங்கல்பட்டு சீமை, கருங்குழி சீமைகளுக்கு, காவல்காரர்களாக நியமித்தும் ஆதிக்கம் கொடுத்தார்கள். செங்கல்பட்டு ஜில்லா, மதுராந்தகம் தாலுகா, திருமலைவைய்யா என்ற ஊரில் மண்டபமும் கோயிலும் கட்டி, இக் கோயில்களில் உய்யாளூர்ப் பாளையக்காரர்களுக்கு மரியாதை இன்றும் நடந்து வருகிறது. இந்த கோயில் மண்டபத்தில் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியை எழுந்தருளுவித்து, மாலை மரியாதைகளைப் பெற்று, முத்தரையர் பாளையக்காரர்களுக்கு இன்றும் பரிவட்டம் கட்டி, சுவாமி மண்டபம் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.
இந்த உய்யாலூர் பாளையப்பட்டின் சந்ததியினர் "ரெட்டூர், இருங்காடு கோட்டை" போன்ற இடங்களில் கொட்டைகளை கட்டி ஆண்டனர். இந்த பாளையப்பட்டார் 32 விருதுகளுடன் சில மைல் தூரத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, சுவாமியை திருத்தேரில் ஏற்றி ஊர்வலம் நடத்துவது வழக்கம் இது இன்றும் வழக்கில் உள்ளது. இவ்வாறான உய்யாலூர் பாளையப்பட்டைச் சேர்ந்த ஆதிகேசவலு நாயுடு ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 மைல் தூரமுள்ள இருங்காடு கோட்டையிலும் இவர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீமான்கள், ராஜரெத்தினம் நாயுடு, திருக்கழுக்குன்றம், சதுரங்கபட்டினம் சாலையில் உள்ள ரெட்டூரில் வாழுகின்றனர். (ஆம்.மெக்கன்ஸி மானூஸ் கிரிப்ட் ஆசிரியர் பர்மா இரா.இளையாழ்வார்) இந்த ஆதிகேசவலு நாயுடுக்கு சின்னராஜு என்ற மகன் ஒருவர் இருந்தார். இவரின் நெற்குன்றம் பாளையப்பட்டும் முத்துராஜா பாளையப்பட்டுகளில் ஒன்றாகும்.
இந்த முத்தரையர் மக்களுக்கு உரித்தான வீரத்தையும், விவேகத்தையும் கண்ட கிருஷ்ணதேவராயர் இவர்களுக்கு சேர்வைக்காரர் என்றும் பாளையக்காரர்கள் என்றும் படையில் இருந்தவர்களுக்கு விருதை வழங்கினார். இவ்வாறு பணியாற்றிய முத்தரையர்கள் ஆட்சி மாறியபோது காடு மலைகளில் கும்பல் கும்பள்களாகவும் கூட்டமாகவும் வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்க்கையில் பாதிப்படைந்தவர்கள், தாழ்ந்தும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். இப்போது இவர்கள் உணவு பெற வலை வீசியும் காடுகளில் வேட்டையாடியும் வாழ்ந்தனர். தங்களை முத்தரையர் என்றும் மற்றும் பல்வேறு சாதிகளாக தங்கள் சாதிகளை செல்லலாயினர். இப்படிப் பல்வேறு பெயர்களில் சாதிகளைச் சொல்லிய போதும் இவர்கள் அனைவருக்குள்ளும் கொள்வினை கொடுப்பினை செய்துகொண்டனர்.
இவ்வாறு பல தொழில்களை கொண்டிருந்தபோதிலும் வேட்டை தொழில்களை கைக்கொண்ட தொழிலாளர்கள் கண்ணப்பர் வழிவந்தோர் ஆவார்கள், ஒருமுறை முத்தரசு சென்னப்பா ஆட்சியில் ஏற்பட்ட திருட்டு கொள்ளை கொலைகளை முத்தரையர் பாளையக்காரர்கள் அடக்கி ஒடுக்கி பெற்றனர். இவர்கள் வடக்கில் இருந்து இந்த சீமைக்கு வரும்போது தங்களது குலதெய்வமான உய்யாலம்மை, அங்காளம்மை கோவிலையும், வீராபுரம் மற்றும் கூவத்தூரிலும் கோயில் கட்டி வணங்கி வந்தனர்...
https://marimuthuampalam.blogspot.com/2020/07/blog-post_9.html