கொற்றவை பிடாரி கிள்ளுக்கோட்டையில்.....
Aug 30, 2023
முத்தரையர் கால கொற்றவை
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் இக்கொற்றவை சிற்பம் காணப்படுகிறது.சங்ககாலத்தில் அடர் வனத்தில் காடமர்செல்வி எனும் பெயரில் கொற்றவை அழைக்கப்பட்டுள்ளார். இப்பகுதி பெரும் வனமாய் அன்று இருந்திருக்கக்கூடும். அதன் தொடர்ச்சியாய் இன்று இக்கொற்றவை "வனதுர்க்கை" என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இப்பகுதியில் அன்று புலிகள் இருந்துள்ளது. இங்கு உலாவிய ஒரு புலியை கொன்று,அது தன்னால் குத்தப்பட்டு இறந்த புலி என்று ஒரு நடுகல் எழுப்பி,அதில் தன் பெயரையும் பொறித்துள்ளார்,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறன். இப்பகுதியில் முற்கால சோழர் கால கற்றளியும், முத்தரையர் கால கோவிலும் இருந்த சுவடுகளும் ஆங்காங்கு உள்ளது.
அடர்வனத்தில் தனித்து இருந்த இந்த அம்மை இன்று "வனதுர்க்கை" எனும் பெயரில் தனித்ததொரு கட்டுமானத்தில் அருள்பாளிக்கிறாள்.