|

ஆன்மீகம்

Sep 07, 2023

திறுநீர்- விபூதி
🔥🔥🔥🔥🔥🔥🔥
ஔவையார் காலத்தில் விபூதியே கிடையாது என்றால் "நீறில்லா நெற்றி பாழ்" என்று எழுதிய ஔவையார் கைபர் கணவாய் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும்.

 திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்று முழு பதிகமே பாடியுள்ளார்.  அதில் நமது முப்பாட்டன் இராவணனுக்காக "இராவணன் மேலது நீறு" என்று ஒரு வரியையும் சேர்த்து எழுதியுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!

"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே"
 - திருஞானசம்பந்தர்.

மேலும் திருமூலர் "கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை",  என்று சிவபெருமான் பூசிக்கொள்ளும் திருநீற்றைக் குறிப்பிட்டு
எப்படிப்பட்ட திருநீற்றை அணிந்தால் பிரம்ம ஞானத்தைப் பெற முடியும் என்பதையும் விளக்குகிறார்.!

"அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம் விரவு கனலில் வியன்உரு மாறி நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத ருருவம் பிரம உயர்குல மாமே"
 - திருமந்திரம்.

பொருள் : பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.  
மேலும் "பிறை நுதல் வண்ணம் ஆகின்று" என்ற புறநானூற்றின் கடவுள் வாழ்த்து வரிகளைக் குறிப்பிட்டு,

 "பிறைநெற்றியோடுற்ற முக்கண்ணினார், பிறைதாங்கு நெற்றியர், பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந்தவனே, பிறைநுதல் விளங்கும்", என்ற தேவார வரிகளை முன்னிறுத்தி "பிறைநுதல்" என்பதை நெற்றியில் பிறைபோன்று அணியும் திருநீறாகவும் உ.வே.சா குறிப்பிடுகிறார். மேலும் கலித்தொகையில்,

"மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு
அணிந்து"

என்ற வரிகளில் திரிபுரத்தை எரித்து அதன் சாம்பல் நீற்றை அணிபவனே என்று சிவபெருமானைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் குறிப்பிடுகிறார். இப்படி பக்தி இலக்கிய காலத்திற்கு முன்பு சங்ககாலம் வரை திருநீற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.‌ தேவாரங்களில் மட்டுமில்லாது திவ்யப் பிரபந்தங்களிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு.!
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மீகம் மற்றும் வரலாறு சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🤝🤝🤝wwwaraiyarsuvaranmaran.com💥💥💥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us