ஆளப்பிறந்த முத்தரையர்களே
Sep 24, 2023
23.5.2022
இன்றைய நாள் ஒட்டு மொத்த முத்தரையர்களின்
"எழுச்சி நாள்"
ஆம்,முத்தரையர் சங்க வரலாற்றில் அதுவரை(2.6.1906 முதல் 22.5.1992வரை)மாநாடு,பொதுக்கூட்டம் என்று நடத்தி கொண்டிருந்த நிலையை மாற்றி முதன்முதலாக தஞ்சை மாவட்ட மக்கள் மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மன்னருக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தையும் இணைத்துக் கொண்டு அந்த ஆண்டு (1992)
23.5.1992ல் மன்னருக்கு 1317 வது ஆண்டு விழா இந்தியா அளவில் சங்க பொறுப்பாளர்களை அழைத்து மிகப்பெரிய அளவில் விழாக்கொண்டாடப்பட்டது.அந்த வருடம் முதல் தொடர்ச்சியாக விழா நடைப்பெற்று வருகிறது.அப்போதுதான் தஞ்சையில் முத்தரையர் மன்னர் வரைந்து வெளிஉலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது.அந்த உருவம் சிலையாக அமையும் என்று அப்போது நாங்கள் எண்ணமில்லை. ஆனால் இன்று உலக அளவில் பிரதிபலிக்கிறது. மேலும் மே 23 என்ற தேதி கோடையில் தான் கொண்டாட வேண்டும் என்று என்(தஞ்சை செல்வராஜ்)வற்புறுத்தலின் காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது.அந்த தேதியையே வருடாவருடம் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முத்தரையர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 30 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது தற்போது தான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இன்று வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்கள்.அனைத்து சமுதாய மக்களுக்கும் இன்றைய நாளை பேச ஆரம்பித்துள்ளார்கள்.இது நமக்கு கிடைத்த வெற்றி. வாழ்க முத்தரையர் சமுதாயம். நன்றி
The above statement by Theivathiru Selvaraj ayya (M.M.M.) Thanjavur