சோழ முத்தரையர் வரலாற்றில்.....
Oct 14, 2023
இன்றைக்கு யார் யாரோ சோழ வம்சத்தை உரிமை கொண்டாடுகின்றனர், ஆனால் நேரடியாகவே முத்தரையர்கள் தங்களை கரிகால சோழனின் வழி வந்தவர்கள் என்றும், சூரிய குலத்தவர்கள் என்றும் ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு கல்வெட்டுகளில் நேரடியாகவே குறிக்கிறார்கள்...
ரேனாடு ஏழாயிரம் நாட்டை ஆண்ட சோழர்கள் தங்களை கரிகால சோழனின் வழி வந்த முத்துராஜாக்கள் என நேரிடையாகவே குறிக்கிறார்கள், எடுத்துக்காட்டு, கலமல்லா கல்வெட்டு (தெலுங்கு மொழிக்கு இந்த கல்வெட்டு தான் செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது)
இராஜ இராஜ சோழனின் தந்தை, சுந்தர சோழன் என்கிற இரண்டாம் பராந்த சோழன் தன்னை முத்தரையர் என அடையாளப்படுத்துகிறார். கொங்கு நாட்டை ஆண்ட கொங்கு சோழர்கள் முத்தரையர்கள் என்பது ஆய்வுகளின் முடிவு...
முத்தரையர் மன்னர்கள் பலர் தங்களை சோழ முத்தரையர் என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். பிற்கால சோழ பேரரசை நிறுவிய விஜயாலய சோழன் முத்தரையர் என்று நிறுவப்பட்டுள்ளது, (இந்தளூர் மற்றும் கழுக்காணி முட்டம் செப்பேடுகள் விஜயாலய சோழன் பல்லவ மன்னன் கம்பவர்மனிடம் இருந்தே தஞ்சையை கைப்பற்றினார் என்று சொல்கிறது)
முத்தரையர்களே, இப்போது புரிகிறதா நமது பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரை திருடும் கூட்டத்தின் நோக்கம்..?? நீ உன்னை அடையாளப்படுத்தவில்லை எனில், உன் அடையாளத்தை மாற்றான் பயண்படுத்தி உன்னை அடையாளமின்றி செய்துவிடுவான்...